மேலும் அறிய

வானம் நோக்கி பறந்த தேசியப் பறவை… மின்சாரத்தால் மௌனமானது!

தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை எடுச்சென்று அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மயிலை வனத்துறையினர் மீட்டு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

தஞ்சையில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் மரங்கள் உள்ளன. இந்த விளையட்டு அரங்கம் உட்பட மரங்களில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன. இந்த மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.

அவ்வாறு வந்து செல்லும் பொதுமக்கள் மயில் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை மைதானத்திற்குள் சுற்றித்தரிந்த மயில் திடீரென உயரே பறந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மின்கம்பியில் மயில் உடல் உரசி உள்ளது. இதில் மின்சாரம் தாக்கிய மயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தஞ்சை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலை எடுச்சென்று அடக்கம் செய்தனர். மேலும் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக இருப்பதால், அதன் உயிரிழப்பு பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக நகர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் சமீபகாலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. நகர் பகுதியில் மயில்கள் அதிகரிப்பதற்கு காடுகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி, அவை நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்களும், வறட்சியும் மயில்கள் நகரங்களுக்குள் வர முக்கிய காரணங்களாக இருக்கலாம் .உணவு எளிதாக மயில்களுக்கு கிடைக்கிறது. மக்கள் வீடுகளுக்கு அருகில் உணவிடுவது மற்றும் தோட்டம், பூங்காக்களில் உள்ள தாவரங்கள், பூச்சிகள் உணவாக கிடைப்பதால், நகர சூழலுக்கு பழகிவிடுகின்றன. நகர் பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பிகளில் மோதுவதால் மயில்கள் உயிரிழக்கின்றன. சாலைகளில் குறுக்கே வருவதால் வாகனங்களில் மோதி உயிரிழக்கின்றன.

நகர்ப்புறங்களில் மயில்கள் பெருகுவது இயற்கையோடு இணைந்த வாழ்வியலை உணர்த்தினாலும், அவற்றுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் நகர்ப்புற திட்டமிடல் இருப்பது அவசியமாகும்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget