மேலும் அறிய

ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு அருமையான இடம் தஞ்சை தென்பெரம்பூர் அணைக்கட்டு

ஒரு நாளில் ஒரு சுகமான, ரம்மியமாக இடத்திற்கு போய் மனசை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு தஞ்சையில் உள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு

வேலை, மனஉளைச்சல், பிரச்சினைகள் என்று கடிகார முள்ளை விட வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் நம்மையும், நம் குடும்பத்தையும் ஆசுவாசப்படுத்த ஒரு நாளாவது ஒதுக்க வேண்டும். அப்படி ஒரு நாளில் ஒரு சுகமான, ரம்மியமாக இடத்திற்கு போய் மனசை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதுவும் நம்ம பட்ஜெட்டிற்குள் அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அப்படி என்றால் உங்களுக்கு ஏற்ற இடம்தான் தஞ்சை மாவட்டம் தென்பெரம்பூரில் அமைந்துள்ள அணைக்கட்டு.

கவலைகள் மறந்து, மனசு, உடம்பு புத்துணர்ச்சி பெற்று உங்களை நீங்களே ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. அத்தகைய சுற்றுலாத் தலமாக உள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு. சிலர் அறிந்தாலும் பலராலும் இன்னும் அறியப்படாமல் உள்ள அருமையான சுற்றுலாத்தலம்தான் இது. புத்தம் புதிய மனிதனாக புத்துணர்ச்சி அளித்து அனுப்பி வைத்து விடும்.

ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு அருமையான இடம் தஞ்சை தென்பெரம்பூர் அணைக்கட்டு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ளது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணைத் தலைப்பிலிருந்து வெளியேறுகிறது காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு. சுழன்றும், தவழ்ந்தும், வேகமாகவும் இருகரைகளையும் தொட்டு தாலாட்டி, முட்டி மோதி கண்களை கொள்ளைக் கொள்ளும் அழகுடன் வெண்ணாறு வந்து சேர்ந்து நிற்கும் இடமே  தென்பெரம்பூர். கடல் போல் காட்சியளிக்கும் தென்பெரம்பூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்தும் ஷட்டர்ஸ் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றும் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது.

இங்கிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகளாகப் பிரிந்து செல்கிறது. மேலும் ஜம்புக் காவேரி வாய்க்கால், ராஜேந்திரன் வாய்க்கால் என்றும் பிரிந்து செல்கிறது.

இந்த அணைக்கட்டுக்கு அருகிலேயே இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிகட்டில் காளையை அடக்கும் வீரரின் சிலை, சுற்றுச் சுவரில் தேசியத்தலைவர்கள் படங்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் மரங்களுக்கு நடுவே இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்குள் புகுந்த உணர்வை ஏற்படுத்தும். மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவில் உட்கார்வதற்காக சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள மண் திட்டில் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள இந்த மரங்கள் காற்றின் வேகத்தில் குளுகுளுவென்று இயற்கை ஏசி காற்றை வழங்குகின்றன.

ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு அருமையான இடம் தஞ்சை தென்பெரம்பூர் அணைக்கட்டு

வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் தன் பயணத்தை தொடங்குகிறது. குறைந்த அளவில் தண்ணீர் செல்லக் கூடிய இதில் அச்சமின்றி எவ்வித ஆபத்தும் இல்லாமல் குளித்து மகிழலாம். மெயின் ஆறுகளில் ஆழமும், முதலை ஆபத்தும் இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு மேல் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லமுடியும். அதுவும் எதிரில் வாகனம் வரமுடியாது. வார இறுதிநாட்களில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்கள் மனமார சாப்பாட்டுடன் வந்து குடும்பத்தோடு குதூகலப்பட்டு செல்கின்றனர்.

திருச்சியிலிருந்து கல்லணை - திருக்காட்டுப்பள்ளி வழியாக பூதலூர் வந்து தென்பெரம்பூரை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து கள்ளப்பெரம்பூர் செல்லும் வழியில் தென்பெரம்பூருக்கு வரலாம்.  காரில் வருபவர்களுக்கு ஏற்ற இடம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருப்பதால் கேண்டீனோ ஓட்டல் வசதிகளே இல்லை. மனதைப் புத்துணர்ச்சியாக்க ரம்மியமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் ஒருமுறை பட்ஜெட் டூருக்கும், ஒன் டே டூருக்கும் ஏற்ற இடமான தென்பெரம்பூர் அணைக்கட்டை ஒருமுறை வந்து பார்த்தால் ஆஹா அற்புதமான இடம் என்று துள்ளிக்குதிப்பார்கள்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget