மேலும் அறிய
Advertisement
Pongal Price: தஞ்சாவூரில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன் விநியோகம்
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, கரும்பு, முந்திரி பருப்பு, சர்க்கரை, ஏலக்காய், திராட்சை ஆகிய பொருட்களுடன் குறிப்பிட்ட ஒரு தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 ஆக அதிகரித்து கொடுத்தார்.
இதையடுத்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் பரிசாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்தது. இவை தரமற்றதாக இருந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. புளியில் பல்லித் தலை, உருகும் வெல்லம் இப்படியாக பல்வேறு விமர்சனங்கள் வந்தன.
இதனால் இந்த ஆண்டும் இது போல் பொருட்களை வழங்கி அரசுக்கு அவப்பெயர் தேடிக் கொள்ளாமல் இருக்க ரொக்கமாகவே வழங்கிவிடலாம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. இது கரும்பு இடம்பெறாததால் கரும்பு விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர் எதிர்க்கட்சிகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என போராட்டங்கள் அறிவித்த நிலையில் அதிரடி உத்தரவாக முதல்வர் பொங்கல் பரிசு தொப்புடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என அறிவித்தார இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுக்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் இப்பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடையில் கூட்டமாக கூடுவதை தடுக்கும் பொருட்டு வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion