மேலும் அறிய

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை..! கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாகிய விவசாயி..! பார்வையற்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்..!

தஞ்சை அருகே பார்வையற்ற இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு தப்பியோடிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் கண்பார்வை பறிபோனது. அந்த பார்வையற்ற இளம்பெண்ணிடம் தஞ்சை அருகே துருசுப்பட்டி மேல தெருவை சேர்ந்த விவசாயி வீரையன் (45)  என்பவர் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து பலமுறை அப்பெண்ணை வற்புறுத்தி தகாதமுறையில் நடந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அறிந்த வீரையன் அப்பெண்ணுக்கு மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அப்பெண் இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த வீரையன் தலைமறைவானார். இதற்கிடையில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் செங்கிகப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த வீரையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உறவினர் ஒருவர் வீட்டில் மறைந்திருந்த வீரையனை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வீரையனை நேற்றிரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
----------------------------
பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை பழங்கொண்டான் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கஜராஜ வள்ளி (57). இவரது கணவர் இறந்து கடந்த 7 மாதங்கள் ஆகிறது

இந்நிலையில் தனது மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் வீட்டில் வள்ளி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கஜராஜவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இருப்பினும் அந்த மர்ம நபரை பிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இரவு நேரத்தில் வீடு புகுந்து பெண்களிடம் இருந்து நகை பறிக்கும் சம்பவங்கள் தஞ்சை மாவட்டத்தில் அடிக்கடி நடக்கிறது. மேலும் சில பகுதிகளில் காற்றுக்காக வீட்டு கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து தூங்குவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
Hindi: ”ஹிந்தி மொழியை உலக மொழியாக மாற்ற வேண்டும்” சென்னயில் உரை நிகழ்த்திய பாஜக அமைச்சர்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Embed widget