மேலும் அறிய

ஓட்டத்தில் ஆக்ரோஷம், நீளம் தாண்டுதலில் புலி வேகம்....பதக்கங்களை குவிக்கும் தஞ்சை மாணவி

ஓட்டத்தில் ஆக்ரோஷம், நீளம் தாண்டுதலில் புலி வேகம் சத்தமின்றி பதக்கங்களை குவிக்கும் தஞ்சை மாணவி சசிகலா

'உடலில் குறை இருந்தால் என்ன, என் உள்ளத்தில் குறையில்லை, தன்னம்பிக்கையின் வலு குறையவில்லை' என்று ஓட்டத்தில் ஆக்ரோஷமும், நீளம் தாண்டுதலில் உறுதியும் கொண்டு சத்தமின்றி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை குவித்து வருகிறார் தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.சசிகலா (வயது 16).
 
மானிடப் பிறவியில் தான் எத்தனை தடைகள். ஊனமில்லாதவர்களில் பலரே தடைகளை தாண்ட முடியாமல், தவித்து ஒடிந்து விழும்போது உடலில்தான் குறை... மனதில் இல்லை என்று தகர்த்தெறிந்து சத்தமின்றி சாதனை புரிகின்றனர் மாற்றுத்திறனாளிகள். இவர்களை திறமை வாய்ந்த திறனாளிகள் என்று கூறுவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவு என்று ஓட்டத்தில் புயலாக, நீளம் தாண்டுதலில் புலியாக பதக்கங்களை வென்றுள்ளார் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாணவி எம்.சசிகலா.
 
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெற்றோர் முருகானந்தம், லதா. கூலித் தொழிலாளர்கள். பிறவியிலேயே இந்த பாதிப்புகளை கொண்ட சசிகலாவை சாதிக்கும் கலாவாக மாற்றியுள்ளது தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி விடுதியில் தங்கி படிப்புடன் தன் விளையாட்டு திறமையை கண்டுபிடித்த உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் அளித்த பயிற்சிகளால் இன்று அனைவரையும் தன் பக்கம்  திரும்பி பார்க்க வைத்துள்ளார் சசிகலா. கடந்த 2019ம் ஆண்டு மயிலாடுதுறையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடந்த விளையாட்டுப் போட்டிகளில் 16 வயதுடையோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம், குழுப் போட்டியான தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் என்று கிடுகிடுவென்று பதக்கத்தை குவித்துள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டரில் வெள்ளி, 800 மீட்டரில் வெண்கலம், நீளம் தாண்டுதலில் வெண்கலம் குவித்துள்ளார் சசிகலா.


ஓட்டத்தில் ஆக்ரோஷம், நீளம் தாண்டுதலில் புலி வேகம்....பதக்கங்களை குவிக்கும் தஞ்சை மாணவி
 
இதேபோல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2020 மே மாதம் நடத்திய மாவட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, நீளம் தாண்டுதலில் வெள்ளி என்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துள்ளார். வாய் அசைவதை பார்த்து பேசுவதை புரிந்து கொள்ளும் சசிகலாவின் ஓட்ட வேகத்தை கண்டறிந்து சரியான முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முருகேசன் கூறுகையில், திறமையான இந்த மாணவிக்கு சரியான முறையில் ஸ்பான்சர் கிடைத்தால் மேலும், மேலும் சாதனைகள் புரிவார் என்று தெரிவித்தார். ஆசிரியர் கூறுவதை உன்னிப்பாக கவனித்து தலையாட்டிய சசிகலாவின் கம்பீரமாக பார்த்த கண்கள் தான் திறமையான திறனாளி என்பதை உணர்த்தியது. உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை என்பது எத்தனை சரியான வார்த்தை.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget