மேலும் அறிய

தஞ்சாவூர்: சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ வாயிலாக பல்வேறு கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள்

இந்த முகாம்களில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வந்து கடன்கள் பெற்று பயனடையலாம்.

தஞ்சாவூர்: சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ வாயிலாக பல்வேறு கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்று பயன்பெற மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் பின்வரும் தேதிகளில் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

வரும் 21ம் தேதி காலை அதிராம்பட்டினம் கூட்டுறவு நகர கடன் சங்கம் விட். அலுவலகத்திலும், 28ம் தேதி காலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், மார்ச் 2ம் தேதி  காலை திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

மேற்படி கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். தகுதியாளவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாராரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் அசல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்களில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வந்து கடன்கள் பெற்று பயனடையலாம். தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், ஆகிய திட்டங்கள் என பலவகை கடன்கள் வழங்கப்படுகிறது. சிறுதொழில் கடன் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். கல்வி கடன் திட்டத்தை பெற்று மாணவ, மாணவிகள் தங்களின் மேற்படிப்பை தொடர்ந்து முன்னேற்றம் அடையலாம். எனவே குறிப்பிட்ட ஊர்களில் அந்தந்த தேதிகளில் தவறாமல் தகுந்த ஆவணங்களை கொண்டு சென்று பங்கேற்று பயன்பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget