மேலும் அறிய
Advertisement
Pugar Petti: தஞ்சாவூர்: ஓரம்போ... ஓரம்போ... சாலையை ஆக்கிரமித்து மனிதர்களை அலறவிடும் மாடுகள்!
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்குமாறு ஏபிபி நாடுவின் புகார் பெட்டி வழியாக தஞ்சாவூர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலைகளில் படுத்துக் கொண்டும், மோதியவாறும் போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் மாடுகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
சாலையில் மாடுகள் கூட்டம்
தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் – ராமநாதபுரம் நால்ரோடு பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் மாநாடு நடத்துவது போல் கூடுகின்றன. அவை கூட்டமாக சாலையிலேயே அமர்ந்து அசைபோட்டு கொண்டு நகர்வதில்லை.
இந்த சாலை வழியாக வண்ணாரப்பேட்டை, 8 கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் செல்பவர்களும் சக்கரசாமந்தம், களிமேடு, சீனிவாசபுரம் உட்பட பல பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பைக்குகள், கார்கள் சென்று வருகின்றன. மேலும் ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பணி முடித்து இரவில் இந்த சாலை வழியாகத்தான் வரவேண்டும்.
இப்படி வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில், சாலை முழுவதையும் அடைத்துக் கொண்டு மாடுகள் அமர்ந்து உள்ளன. மேலும் பல மாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொண்டு வாகனங்கள் மீது விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்துகளும் ஏற்படுகின்றது.
வாகனங்கள் செல்ல முடியாத நிலை:
ஒன்றல்ல, இரண்டல்ல டஜன் கணக்கில் சாலையிலேயே மாடுகள் மாநாடு நடத்துகின்றன. இதனால் நான்கு புறத்திலும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள் இந்த மாடுகளுக்கு பயந்து கொண்டு வாகனத்தை மெதுவாக இயக்கி செல்லும் நிலை உள்ளது.
மேலும் வாகன ஓட்டுனர்கள் யாராவது ஹாரன் அடித்தால் மிரண்டு போய் மாடுகள் விருட்டென்று எழுந்து வாகனங்களுக்குக் குறுக்காகவும் ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நடந்து செல்லவும் அச்சப்படுகின்றனர். வயதானவர்கள் மாடுகள் முட்டி காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
எனவே சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?
ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion