மேலும் அறிய

மாநகராட்சி வாகனத்தை சிறைப்பிடித்த தஞ்சை மக்கள்: எதற்காக தெரியுங்களா?

கரந்தை, பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி விளார் ரோடு மாரிக்குளம் சுடுகாடு எதிரில் பாதாள சாக்கடை கழிவு நீர் அடிக்கடி சாலையில் ஓடியதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது என்று தெரிவித்து மாநகராட்சி வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து சாலைமறியல் செய்தனர்.

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள கழிவுநீரை சேகரிப்பதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரந்தை, பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. மேலும் மாநகரில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழைவு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தஞ்சை விளார் ரோடு மாரிக்குளம் சுடுகாடு அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மாரிக்குளம் சுடுகாடு எதிரில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடிக்கடி சாலையில் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து  மாநகராட்சி சார்பில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பெரிய அளவிலான குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது .

இந்த குழாய் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த பணியால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இருப்பினும் இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை சேதமடைந்தது. மேலும் கழிவு நீரும் சாலையில் வழிந்தோடி பள்ளங்களில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். 

பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்ததால் இந்த வழியாக செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பழ. ராஜேந்திரன், வசந்த், ஜெயக்குமார், எஸ்.எம்.ராஜேந்திரன், முனியாண்டி, பிரகாஷ், சுரேஷ்குமார், ஆனந்தி உள்பட ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி வாகனத்தையும் சிறை பிடித்து கோஷமிட்டனர். உடனடியாக பாதாள சாக்கடை கழிவு‌நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.  தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடந்த  4 மாதமாக இவ்வாறு அடிக்கடி நடக்கிறது. இப்பகுதியில் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் உள்ளனர். இந்த கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தால் உடன் சரி செய்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் பணிகள் முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் இப்பணிகளை முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget