மேலும் அறிய

விபத்துக்கள் நடக்கும் பகுதி... சிறிய ரவுண்டானா கட்டுங்களேன்: பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சிறிய அளவிலான ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது இப்பகுதி வழியாக புதுக்கோட்டை உட்பட பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். 

இந்த தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதி அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள் மற்றும் ஒரத்தநாட்டில் இருந்து வல்லம் திருச்சிக்கு செல்லும் வாகனங்கள், வல்லத்தில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை வரும் வாகனங்கள் என திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். முக்கியமாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இப்பகுதி வழியாக சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருக்கானூர்பட்டி நால்ரோட்டில் வேகத்தடை உள்ளது. மேலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அடிக்கடி வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து போன்றவை இப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் வேகமாக வரும் பேருந்துகள், வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் திருக்கானூர்பட்டி நால் ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான கிராமப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களுக்கு தேவையான உரங்கள் உட்பட இடுபொருட்களை இருசக்கர வாகனங்களில் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களின் இயக்கம் அதிகமாக உள்ளது, இவ்வாறு வரும் வாகனங்கள் வலது புறம் மற்றும் இடதுபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து வந்த அரசு பேருந்து திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி பயணிகள் காயமடைந்த சம்பவமும் நடந்தது. இதே போல் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த பஸ்சும் ஒரத்தநாட்டிலிருந்து வல்லம் நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் வேனும் மோதிக்கொண்டு விபத்தும் உள்ளாகி பயணிகள் காயமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நான்கு புறமும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget