மேலும் அறிய

நிர்வாக சீர்கேடுகளை உடன் களையணும்: தஞ்சையில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாக சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் இந்த சர்க்கரை ஆலை அவலத்தை நினைத்து கரும்பு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட மூவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு தோழகிரி பட்டி, மேட்டுப்பட்டி, திருக்கானூர்பட்டி, மஞ்சப் பேட்டை,  முதுகுளம், வீரடிப்பட்டி உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து  கரும்பு விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

பல்வேறு இடையூறுகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளைத் தாண்டி கரும்பு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கரும்புகளை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர்.  இருப்பினும் பழம்பெருமை வாய்ந்த இந்த கரும்பு சர்க்கரை ஆலையை தலைமை நிர்வாகி, நிர்வாக அலுவலர்  மற்றும் கரும்பு அலுவலர்  ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

நிர்வாக சீர்கேடுகளை உடன் களையணும்: தஞ்சையில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி தவிக்கிறது

நிர்வாக சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் இந்த சர்க்கரை ஆலை அவலத்தை நினைத்து கரும்பு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட மூவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.  அவர்களுக்கு வேண்டியவர்களிடம் மட்டும் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் விரும்புகிற இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து கொடுக்கின்றனர்.  சர்க்கரை துறை ஆணையர் உத்தரவே அலுவலகப் பணியாளர்கள், கரும்பு அலுவலர்கள் காலை 10 மணிக்கு வந்து மாலை 5:30 மணி வரை பணி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் கரும்பு உதவியாளர்கள் காலை 7 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு மூடுவிழா நடத்தும் நிலை ஏற்படும்.

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி நிர்வாக சீர்கேடுகளை களைந்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி, கந்தவேலு, காவிரி உரிமை மீட்பு குழு வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ், தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி அறிவழகன், முன்னோடி விவசாயிகள் மஞ்சப்பேட்டை ராமச்சந்திரன், கண்டிதம்பேட்டை கோவிந்தராஜ், விளார் செந்தில், சிலம்பரசன், அகிலன், சின்னதுரை, கல்யாணசுந்தரம்,சுடர்வண்ணன், விஜயகுமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சாலைமறியல் நடத்தப்படும் என எச்சரிக்கை

மேலும் இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget