மேலும் அறிய

தஞ்சையில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாடு... யார் நடத்த போறாங்க தெரியுங்களா?

மாவட்ட கலெக்டர் விவசாயிகள் சங்க தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் நன்றாக நடப்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சாவூர்: வரும் ஜுன் 15-ம் தேதி தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் வரவேற்றார். மகளிரணி நிர்வாகிகள் மைதிலி , வனிதா மற்றும் சேகர், மாவட்ட அவை தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில தலைவர் கே. எஸ். முகமது இப்ராஹிம் தலைமை வகித்து பேசியதாவது: வரும் ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் குறுவை சாகுபடியை உரிய காலத்தில் மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி விடுவார்கள். வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டுவதற்கு ஏதுவாக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.  அதேபோல் தூர்வாரும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் விவசாயிகள் சங்க தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் நன்றாக நடப்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.  தஞ்சையில் நம் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், டெல்டா மாவட்ட சாகுபடி பாசன வசதிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.  கும்பகோணத்தில் டாக்டர் கலைஞர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என  சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்த முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வது. மேலும் இதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

வரும் ஜுன் 15-ம் தேதி தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை நடத்துவது, அதில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள்,  விவசாய விஞ்ஞானிகளை அழைப்பது . மாநாட்டு பணிகளை  முகமது இப்ராஹிம்,  ராஜேஷ் கண்ணன் , ஜீவானந்தம் , சசிகுமார், ஜெயக்குமார்  ,அரவிந்த் ,சக்திவேல் , சிலம்பரசன் ஆகியோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிக்கு ரூ.25 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறும் வேளையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விவசாயிகள் சங்க தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்டக்குழு மூலம் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் சிறப்பாக நடைப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவராக ராஜா , தஞ்சை ஒன்றிய துணை தலைவராக சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மாநில இளைஞர் அணிசெயலாளர் ராஜேஷ் கண்ணன், மாநில துணை செயலாளர் சசிகுமார்,  தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். இறுதியில் சேகர் நன்றி கூறினார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget