மேலும் அறிய

கல்லணையிலிருந்து 4 அமைச்சர்கள் தண்ணீர் திறந்தனர்... முப்பெரும் தேவிகளாக இணைந்த 3 மாவட்ட பெண் கலெக்டர்கள் பங்கேற்பு

டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் திறந்தனர்.

தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் திறந்தனர். இதில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் முப்பெரும் தேவிகள் போல் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பெண் கலெக்டர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியானது

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகாரிப்பால் நேற்று அணை 120 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அறிவிப்பு
 
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், முக்கொம்பு பகுதிகளை கடந்து, தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது. இதையடுத்து கல்லணையிலிருந்து இன்று (31ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக கருப்பணச்சாமி, ஆஞ்நேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கல்லணையிலிருந்து 4 அமைச்சர்கள் தண்ணீர் திறந்தனர்... முப்பெரும் தேவிகளாக இணைந்த 3 மாவட்ட பெண் கலெக்டர்கள் பங்கேற்பு

4 அமைச்சர்கள் இணைந்து திறந்தனர்

பின், மேளதாளத்துடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமையில்  எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முதலில், காவிரியில் தண்ணீரை திறந்துவிட்டனர். பின்னர் வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டி பூக்களையும், நவதானியங்களையும் ஆற்றில் தூவினர். 

முப்பெரும் தேவிகளாக இணைந்த மாவட்ட பெண் கலெக்டர்கள்

கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் 1500 கன அடி வெண்ணாற்றில் ஆயிரம் கன அடி கல்லணை கால்வாயில் 500 கன அடி கொள்ளிடத்தில் 400 கன அடி வீதம் முதல் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ, புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆகிய மூன்று மாவட்ட கலெக்டர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் முப்பெரும் தேவிகள் போல் ஒன்றாக சேர்ந்து தண்ணீரை திறந்து விட்டனர். கல்லணை திறப்பில் இதுபோன்று எந்த ஆண்டும் நடந்தது இல்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

பயிர் கடன் தேவைக்கேற்ப வழங்கப்படும்

பின்பு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: கல்லணையில் இருந்து தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்டம் முழுவதும் 7.95 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். உரம் தட்டுப்பாடு இன்றி வேளாண்மை துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் டெல்டா மாவட்டங்களில்தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

நடப்பாண்டில் (2024-2025) கல்லணையிலிருந்துகாவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில்  ரூ.6049.39 லட்சம் மதிப்பில் சுமார்    3733.79 கி.மீ நீளத்திற்கு சிறப்பு  திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

பயிர் கடன் தேவைக்கேற்ப வழங்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளார்கள். நாங்களும் அணைகட்ட விடமாட்டோம். கடைமடை பகுதிகளுக்கு ஒரு வாரத்திற்குள் தண்ணீர் சென்று விடும். ஏரி குளம் குட்டை ஆகியவற்றில் விரைவில் தண்ணீர் நிரப்பப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன்,  தஞ்சாவூ் டி.கே.ஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை 
அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், மண்ணச்சநல்லூர் கதிரவன், கீழ்வேளூர் நாகைமாலி, தாட்கோ தலைவர் மதிவாணன், மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.ராமநாதன், திருச்சி அன்பழகன், உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், தஞ்சாவூர் ோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம்,  சிவகுமார் மற்றும் பலர் கலந்து ொண்டனர்

மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட்டாலும் அதிலிருந்து நான்கு நாட்களில கல்லணை திறக்கப்படுவது வழக்கம். காரணம் அப்போது தண்ணீர் கல்லணையை வந்து சேரும். ஆனால் தற்போது மூன்று நாட்களிலேயே கல்லணை திறக்கப்பட்டது. மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக கல்லணையை வந்து சேராத நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget