மேலும் அறிய

நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

கடந்த முறை தூர் வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது போல, இந்த முறையும் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்:  இந்தாண்டு அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணிகள் அமையும். நடப்பாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர் வாரும் பணியை நேற்று மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 
நடப்பாண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 12 மாவட்டங்களில் எந்தெந்த வேலையை எடுத்து செய்வது என முன்கூட்டியே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆனந்த காவேரி வாய்க்காலுக்கு தூர் வாருவதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாருவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த முறை 834 மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு 4 ஆயிரத்து 773 கி.மீ. தூர் வாரப்பட உள்ளது. கடந்த ஆண்டு தூர் வாரும் பணியை நீர்வளத்துறை அலுவலர்கள் மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

நீர்வளத் துறைச் செயலரும், மாவட்ட கலெக்டர்களும் மற்ற அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பணிகள் செய்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்களைப் பார்வையாளர்களாக அனுப்பி பணிகளை கவனிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

கடந்த முறை தூர் வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது போல, இந்த முறையும் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணி அமையும். நடப்பாண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், நீர் வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர் வளத் துறைத் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ். ராமமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். கடந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தூர்வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அதனால் தற்போதே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget