மேலும் அறிய

110 ஆண்டுகள் பெருமையுடன் நடந்த பாஸ்கா நாடகம்... அனைத்து மதத்தினரும் பங்கேற்று நடித்தனர்

தஞ்சையில் தொடர்ந்து 110 ஆண்டுகளாக இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை திரு இருதய மறைமாவட்ட பேராலய பங்கு பாஸ்கு கலை மன்றம் சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் 110 ஆண்டுகளாக ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து வரும் பாஸ்கா நாடகம் நேற்று நடைபெற்றது. இதில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று நடித்தனர்.

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் 46 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து, அவர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நேற்று ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடந்தன. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடந்தன.

தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் அடிகளார் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில், புது நெருப்பு, புது நீர் புனிதம் செய்யும் சடங்குகள், மறையுரை, கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றன. இதையடுத்து, இறை மக்கள் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர், வியாகுல மாதா ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்தெழுந்த காட்சியை நினைவுகூரும் விதமாக உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இயேசுவின் உயிர்த்த ஆண்டவரின் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, பவனியாக திரு இருதய பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அதிகாலை கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.

இவ்வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், உதவிப் பங்குத் தந்தையர்கள் எஸ். அரவிந்த், எம். ஜெனித் லாரன்ஸ், மறை மாவட்டப் பொருளாளர் எஸ். சேசுராஜ், திட்டக் குழுச் செயலர் ஜான் பீட்டர், ஆயரின் செயலர் ஷெரில் கியூபர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பெருவிழாவை ஒட்டி ‘பாஸ்கா’ எனும் இயேசுவின் வாழ்க்கை நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் ஆவூர், இடைக்காட்டூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் இந்த நாடகம் நடத்தப்பட்டன. பல இடங்களில் இந்த நாடகம் நின்று விட்டது.

ஆனால் தஞ்சையில் தொடர்ந்து 110 ஆண்டுகளாக இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை திரு இருதய மறைமாவட்ட பேராலய பங்கு பாஸ்கு கலை மன்றம் சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று தஞ்சை வியாகுல அன்னை ஆலய வளாகத்தில் இந்த நாடகம் நடைபெற்றது.

இதனை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். இதில் பங்குத்தந்தைகள் பிரபாகர், அரவிந்த், ஜெனித்லாரன்ஸ், பாஸ்கு கலைமன்ற தலைவர் யாகப்பா, இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இயேசுவின் உயிர்ப்பு மற்றும் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு நடித்தனர். வழக்கமாக இந்த நாடகம் இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 5 மணி வரை விடிய, விடிய நடைபெறும். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறை காரணமாக இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற்றது.

இதில் பாஸ்கா நாடகம் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி புத்தகம் வெளியிட்ட பங்குத்தந்தை அகஸ்டின் கவுரவிக்கப்பட்டார். இதே போன்று பாஸ்கா நாடகத்தில் 50 ஆண்டுகளாக மாதா வேடத்தில் நடித்து வரும் ராணிஜெயாவும் கவுரவிக்கப்பட்டார். இந்த நாடகத்தை அனைத்து மதத்தினரும் கண்டுகளித்தனர். முன்னதாக கிளமெண்ட் அந்தோணிராஜ் வரவேற்றார். முடிவில் செயலாளர் வின்சென்ட் சகாயராஜ் நன்றி கூறினார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
Embed widget