மேலும் அறிய

Thanjavur District Power Shutdown (03.07.2026)"பவர் பேங்க் சார்ஜ் போடுங்கோ... இன்வெர்ட்டர் ரெடியா?... நாளை 3.7.26 கரண்ட் கொஞ்சம் ஓய்வெடுக்குது!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் என்பது மின் விநியோக அமைப்பை பாதுகாப்பாகவும் தடையின்றியும் செயல்பட வைப்பதற்கான வழக்கமான நடைமுறையாகும். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுள்ளது.

தஞ்சாவூர்: "செல்போனை முழுசா சார்ஜ் பண்ணிட்டீங்களா? பவர் பேங்க் ரெடியா?" என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நாள் வந்துவிட்டது. அட ஆமாங்க. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

பராமரிப்பு பணிக்காக தற்காலிக மின்தடை

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மின் உபகரணங்களை பரிசோதித்தல், பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தொடர்ந்து சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்க இதுபோன்ற பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

வடசேரி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளர்பட்டிக்காடு, பரவக்கோட்டை, தளிக்காடு, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, அண்டமி, ஓலையகுன்னம், வளையகாடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் நிறைவடைந்தால், அதன்பிறகு மின் விநியோகம் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டியே தயாராகுங்கள்

மின்தடை காரணமாக தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் போன்கள், பவர் பேங்க், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக் கொள்வதுடன், தண்ணீர் மோட்டார் பயன்படுத்துவோர் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்களது பணிகளை அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில மணி நேர சிரமம்... நீண்ட நாள் நிம்மதிக்காக

மாதாந்திர பராமரிப்பு பணிகள் என்பது மின் விநியோக அமைப்பை பாதுகாப்பாகவும் தடையின்றியும் செயல்பட வைப்பதற்கான வழக்கமான நடைமுறையாகும். எனவே, பொதுமக்கள் இந்த தற்காலிக மின்தடைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகவே, நாளைய தினம் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், "கரண்ட் போகும் முன்பே சார்ஜ் போடுங்கள்" என்ற பழைய அனுபவத்தை மறக்காமல், தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டால், மின்தடை நேரத்தை சிரமமின்றி சமாளிக்க முடியும். மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், பொதுமக்கள் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும். எனவே வடசேரி மக்களே நாளைக்கு உங்கள் பகுதியில் பவர் கட் ஆகிறது. அதற்கு முன்னதாகவே நீங்கள் தயாராகி பவர்கட்டை சமாளிச்சுங்கோ. மறந்திடாதீங்க. அப்புறம் அவஸ்தை உங்களுக்குதான்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Embed widget