மேலும் அறிய

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் - முடிவை திரும்பபெற கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

’’மாவட்ட கலெக்டர் உடனடியாக தற்காலிகமாக பணி நீக்கத்தை ரத்து செய்யா விட்டால், தொடர் போராட்டம் விரைவில் நடத்தப்படும் அரசு ஊழியர்கள் அறிவிப்பு’’

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி நீக்கம், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல், ஊழியர்களின் விளக்கத்தினை கேட்காமல், அதிகாரத்தை பயன்படுத்தி,  தன்னிச்சையாக, முடிவெடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் ஹேமலதா, பணிமேற்பார்வையாளர்கள் திருமாறன், செந்தில்குமார் ஆகியோரின் தற்காலிக பணிநீக்கத்தினையும், கணினி உதவியாளர் சாந்தி பணி நீக்கத்தினையும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும்.

தஞ்சையில் மீட்கப்பட்ட 700 ஏக்கர் கோயில் நிலங்கள் விவசாயிகளுக்கு பொது ஏலம்

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் - முடிவை திரும்பபெற கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

தஞ்சை: பணி மாறுதலில் செல்லாத அதிகாரியை பூட்டி சிறை வைத்த பெண்கள்

இப்பிரச்சினை தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில்,மாவட்ட நிர்வாகம் கோரிக்கை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதுவரை தற்காலிக பணி நீக்கம், பணி நீக்கம் ரத்து செய்யப்படாத நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஒட்டுமொத்த சிறுவிடுப்பு போராட்டம் எடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.  இதனால் அன்றாடம் நடைபெறும் பணிகள் தேக்கமடைந்தன. இதில், மாவட்ட கலெக்டரின் எதேச்சதிகாரப் போக்குடன் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களிடம் நடந்து கொள்வதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன.போராட்டத்தில் ஊராக வளர்ச்சி துறை அனைத்து நிலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் கைது

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் - முடிவை திரும்பபெற கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உண்மை நிலையினை ஆராயாமல் மாவட்ட கலெக்டர் தனிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளார். கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, அவரது அதிகார போக்கை காட்டுகின்றது. இது போன்ற நடவடிக்கையால், மற்ற பணியாளர்களுக்கும் இது போன்ற நிலை வந்தால், அவர்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும். மாவட்ட கலெக்டர் உடனடியாக தற்காலிகமாக பணி நீக்கத்தை ரத்து செய்யா விட்டால், தொடர் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.

கார்த்தியின் விருமன் படம் - கெடுபிடிக்கு பிறகு படப்பிடிப்புக்கு தேனி ஆட்சியர் அனுமதி

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget