மேலும் அறிய

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை; 4 பேர் மீது வழக்குப்பதிவு: 3 தனிப்படை அமைப்பு

தஞ்சாவூரில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை பகுதியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை முன்விரோதத்தால் நடந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. 

தஞ்சை கரந்தை பகுதியில் ரவுடி வெட்டிக் கொலை

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் மகன் அறிவழகன் (35). மீன் வியாபாரி. போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் அறிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அறிவழகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முன்விரோதத்தில் நடந்த கொலை சம்பவம்

இதுதொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அறிவழகனும், திவாகரும் தனித்தனி வழக்கு தொடர்பாக  புதன்கிழமை ஆஜராகினர்.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அறிவழகன் தனது நண்பர்கள் மகேந்திரன், சுரேஷ், ஆனந்த் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டு இருந்தபோது அங்கு திவாகர் மற்றும் சிலர் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

இந்நிலையில் தலைமறைவான திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் கந்தவேல், செல்வகுமார், பரத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி., சோமசுந்தரம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசன், அருள், டேவிட் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget