மேலும் அறிய

சுட்டெரிக்கும் வெயில் தெரியாமல் இருக்க தஞ்சை பெரிய கோயிலில் சணல் விரிப்பு - பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு

கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெயிலின் தாக்கத்தை உணர்வதில் இருந்து வெளியேறி, கொளுத்தும் வெயிலிலும் இதமாக நடந்துசென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: கோடை வெயில் தற்போது வெளுத்தெடுத்து வருகிறது. மதிய வேளைகளில் தார் சாலைகளில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்த வெயிலால் பக்தர்கள் அவதியடையக்கூடாது என்பதற்காக பெரிய கோயிலில் சணல் விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பர்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.

அந்தளவிற்கு உலக புகழ்பெற்ற பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், தஞ்சை மாநகரிலும் இயல்பான வெயிலை விட கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில், பக்தர்களின் வசதிக்காக சணலால் ஆன மிதியடி விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.

அதில் கோயில் பணியாளர்களால் அடிக்கடி தண்ணீரும் ஊற்றப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வெயிலின் தாக்கத்தை உணர்வதில் இருந்து வெளியேறி, கொளுத்தும் வெயிலிலும் இதமாக நடந்துசென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget