மேலும் அறிய

சுவாமி மலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

’’வரும் 18ஆம் தேதி தைப்பூச நாளன்று காலை 10 மணிக்கு சுவாமி புறப்பாடும் அதைத் தொடர்ந்து கோயில் உள்ளே உள்ள வஜ்ரதீர்த்த்தில்  தீர்த்தவாரியும் நடக்கிறது’’

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

சுவாமி மலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.

சுவாமி மலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளின்ர். இரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்றது.இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக 13-ம் தேதி இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 18ஆம் தேதி தைப்பூச நாளன்று காலை 10 மணிக்கு சுவாமி புறப்பாடும் அதைத் தொடர்ந்து கோயில் உள்ளே உள்ள வஜ்ரதீர்த்த்தில்  தீர்த்தவாரியும் நடக்கிறது.

அதே போல், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா  நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது.வரும் 18-ம் தேதி தைப்பூசத்தினத்தன்று தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அரசின் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!Rahul gandhi Shivan Photo  : ராகுல் கையில் சிவன்! அப்செட்டான மோடி“ இந்துத்துவா உங்க சொத்தா?”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Embed widget