மேலும் அறிய
Advertisement
கோவை கார் வெடிப்பு சம்பவம்: நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் வீட்டில் சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்த அசன்அலி மற்றும் மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் தமிழக போலீசார் அதிரடி சோதனை.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சதேகத்திற்குறிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
அதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள அசன்அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் இருவரது வீடுகளிலும் நேற்று சோதனை மேற்கொண்டனர்
முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் சுமார் ஒருமணிநேரம் நடந்த ஆய்வு மற்றும் விசாரணையை முடித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர்.
இந்நிலையில் அல் கொய்தா அமைப்பின் உதவியுடன் செயல்படும் வகாத் இஸ்லாம் அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் 2019-ஆண்டு ஜூலை 13,ம் தேதி தமிழகத்தில் சென்னை, நாகை உள்ளிட்ட 4 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதும். இதில் நாகை சிக்கல் பகுதியை சேர்ந்த அசன்அலி, மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடு மற்றும் அலுவகத்தில் இருந்த 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப், 6 ஹார்ட் டிஸ்க், 7 பென்டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்தியாவில் அன்சாருல்லா என்ற இயக்கத்தை உருவாக்கி இந்திய இறையாண்மைக்கு ஊறு செய்ய நினைத்த குற்றத்திற்காக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் 2019-ஆண்டு ஜூலை 14,ஆம் தேதி சிக்கல் அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion