மேலும் அறிய

திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

ரயில்வே அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திரபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து  9.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மதியம் 3.15க்கு வந்தது.

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையான மீட்டர்கேஜ் பாதையாக சென்னை-காரைக்குடி-ராமேஸ்வரம் வழி பாதையாக இருந்தது. இந்த வழிபாதையில் ராமேஸ்வரம், காரைக்குடி வரையில் ஜனதா, கம்பன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழிபாதை அகல ரயில் பாதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திரபாத்திலிருந்து சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயங்கப்பட உள்ளதாக ரயில்வேதுறை அறிவித்தது. அந்த ரயில் வியாழன் தோறும் காலை 9.45 மணிக்கு சென்னை எக்மோரில் புறப்பட்டு திருவாரூர் 3.15 மணிக்கு வந்து சேர்கிறது. பின்பு 3.25-க்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு இரவு 11.40-க்கு சென்றடைகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்தில் 8.50 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் மதியம் 3.15 மணிக்கு வந்து, அங்கிருந்து 3.25-க்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.50-க்கு சேர்கிறது.  பின்னர் செகந்தராபாத்க்கு பயணத்தை தொடர்கிறது. 


திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு பயணிகள் இடையே வரவேற்பையும், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் இரவு செகந்திரபாத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு காலை வந்தடைந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து  9.45 மணிக்கு புறபட்டு திருவாரூருக்கு மதியம் 3.15 மணிக்கு வந்தது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு திருவாரூர் ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பாரதி, இலியாஸ், அக்பர் பாட்ஷா ஆகியோர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். இதில் திருச்சி கோட்ட இயக்குதல் மேலாளர் வெங்கட்டராகவன் கலந்து கொண்டார். ரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், செகந்திராபாத்- சென்னை-திருவாரூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பஸ் பயணத்தை விட பயண நேரமும், கட்டணமும் குறைந்த அளவில் சிறப்பு ரயில் மூலம் கிடைப்பதால் மிகுந்த பயனை பயணிகளுக்கு அளிக்கும். இந்த வழிதடத்தில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும் என்றார்.


திருவாரூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு

மேலும் அவர் கூறுகையில், திருவாரூர் ரயில் நிலையம் முன்மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஏடிஎம் வசதி,  தொடுதிரை வசதி,  முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல வாகனம், உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் ஒரு சில வசதிகளை தவிர பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக திருவாரூரில் இருந்து மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு ரயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் அந்த ரயில் வசதியும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது உடனடியாக மத்திய அரசு ரயில்வே துறை ரயில் வசதிகளை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுகிறோம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget