Mayiladuthurai: பள்ளி, கல்லூரி மாணவர்களின் 'திக்' 'திக்' திகில் பயணம் - கண்டுகொள்ளுமா அரசு?
மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாலையில் வந்த தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறு உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை வந்த தனியார் பேருந்தில் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் மற்றும் தருமபுரத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் ஏறினர். 55 பேர் மட்டுமே பயணம் செல்லும் அந்த பேருந்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். அதிக அளவில் பயணிகள் ஏறியதால், அதன் காரணமாக பேருந்து ஒரு பக்கம் சாய்வாக கவிழ்வது போல் அபாயகரமாக சென்றது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணராமல் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் பலரும் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளதால், மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையினர் மாணவ மாணவிகள் அதிகளவில் பயணம் செய்யும் காலை, மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்லும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறையினர் அறிவுரை வழங்க வேண்டும், பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கிராம புற பேருந்துகள் பற்றாக்குறையால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிலிருந்து திருவெண்காடு வழியாக பூம்புகார் செல்லும் ஏ5 எண் கொண்ட அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து மாணவர்கள் பேருந்தின் படி கட்டில் மற்றும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கி படியும் பேருந்து பயணம் செய்து வருகின்றனர்.
Aadi Amavasai Thaligai: ஆடி அமாவாசை பூஜைக்கு செய்யவேண்டிய தளிகை உணவு வகைகள் என்ன?
ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் மாணவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் இருந்து மேலே ஏற சொல்லியும், அவர்கள் ஏறாமல் தொங்கியநிலையில் தான் பயணத்தை தொடர்கின்றனர். ஓட்டுனர் பேருந்தினை இயக்க முடியாமல் பெரும் சிரமத்துடனே ஓட்டி செல்கின்றனர். மேலும், பள்ளி நேரத்தில் மட்டுமாவது கூடுதல் பேருந்துகளை மாணவர்கள் நலன் கருதி அரசு இயக்க வேண்டும், போக்குவரத்துக்கு போலீசார் பள்ளி நேரத்தில் மாணவர்கள் தொங்கி செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.