மேலும் அறிய

பொதுத்துறை நிறுவனத்தில் 1.80 லட்சத்தில் சம்பளம்ங்க... இன்ஜினியர் படிப்பு முடிச்சவங்க கவனத்திற்கு!!!

இன்ஜினியரிங் டிரெய்னி: ரூ.60,000 - 1,80,000/-,  சூப்பர்வைசர் டிரெய்னி (Technical): ரூ.33,500 - 1,20,000/-. அப்புறம் என்ன உங்களுக்கு இந்த தகுதி இருக்கா தட்டுங்க விண்ணப்பத்தை.

தஞ்சாவூர்: இன்ஜினியரிங் படிப்பு முடிச்சங்வங்களா நீங்க. அப்போ இந்த வாய்ப்பை கண்டிப்பாக மிஸ் செய்யவே செய்யாதீங்க. அருமையான வேலை வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கு. மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுங்களா ரூ.1.80 லட்சமுங்க.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் 1.80 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 15 கிளைகளுடன் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கனரக மின் சாதனங்கள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில்தான் இப்போ வேலை வாய்ப்பு காத்திருக்கு. 

பொதுத்துறை நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின் படி அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும். இதனால், பொதுத்துறை நிறுவனத்தில் வெளியிடும் தேர்வு அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் இப்போ பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று தெரியுங்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம். உங்களுக்கும் அந்த தகுதி இருந்தா உடனே விண்ணப்பம் செய்யுங்க... தேர்வில் வெற்றி பெற்று காலரை உயர்த்திக்கோங்க.

எந்தெந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இன்ஜினியரிங் டிரெய்னி: மெக்கானிக்கல் - 70, எலக்ட்ரிக்கல் - 25, சிவில் - 25, எலக்ட்ரானிக்ஸ் - 20, கெமிக்கல் - 05, உலோகவியல் - 05 என மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

சூப்பர்வைசர் டிரெய்னி (டெக்னிக்கல்): மெக்கானிக்கல் - 140, எலக்ட்ரிக்கல் - 55, சிவில் - 35, எலக்ட்ரானிக்ஸ் - 20 என மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

சரிங்க இதற்காக கல்வித் தகுதி. இதோ பாருங்க... இன்ஜினியர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இன்ஜினியரிங்/ டெக்னாலஜி படிப்பு முடித்து இருக்க வேண்டும். அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் அல்லது இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டூயல் டிகிரி புரோகிராம் அல்லது டெக்னாலஜி படித்து இருக்க வேண்டும்.

சூப்பர்வைசர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். 65 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான CGPA -அனைத்து செமஸ்டர்களிலும் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

சரி இதுக்கு என்ன வயது வரம்பு... பாருங்க... இதுதான் வயது வரம்பு. விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். 01/02/1998 க்கு முன்பாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

எல்லாம் சரி சம்பளம்... சம்பளம்... எவ்வளவு

இன்ஜினியரிங் டிரெய்னி: ரூ.60,000 - 1,80,000/-,  சூப்பர்வைசர் டிரெய்னி (Technical): ரூ.33,500 - 1,20,000/-. அப்புறம் என்ன உங்களுக்கு இந்த தகுதி இருக்கா தட்டுங்க விண்ணப்பத்தை.

இதுக்கான தேர்வு முறையையும் தெரிஞ்சுக்கோங்க கம்ப்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவாங்க. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.472 செலுத்தணும். பொதுப்பிரிவினர் உள்பட இதர பிரிவினருக்கு ரூ.1072 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 28.02.2025 ஆகும். இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கு. இனியும் தாமதம் வேண்டாங்க. இன்னைக்கே விண்ணப்பிச்சிடுங்க. தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bhel.com/recruitment இந்த வெப்சைட்டை பார்த்துகோங்க... வரட்டா....!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget