மேலும் அறிய

தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழலில் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்  திட்டுப்படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு,  தங்கள் உடமைகளுடன்  படகுகள் மூலமும் மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது திருச்சி முக்கொம்பு வழியாக கல்லணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் தில் திறக்கப்பட்ட நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.


தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழலில் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து, இந்த  கிராமங்களில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

NIA Raids : பஞ்சாப், ஹரியானா, டெல்லி-என்.சி.ஆரில், 40-க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை! என்ன காரணம்..?


தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழலில் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

தாழ்வான பகுதி வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர். மேலும் கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் செல்வதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது‌. இதனால் வெள்ள நீரை கடந்தும் படகுகள் மூலமும் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

HBD Jyothika: தமிழ் சினிமாவின் ‘பொன்மகள்’...நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள் இன்று..!


தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழலில் ஆற்றுப்படுகை கிராம மக்கள்

மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் படகுகள் மூலம் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 5 முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இக்கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் 5 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கள் வீடு உடமைகளை விட்டு மக்கள் நிவாரணம் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கொள்ளிட ஆற்று கரையில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இந்த நிலைமையா? பேராவூரணி அரசுப் பள்ளியில் கூரையாய் தொங்கும் ஆபத்து!
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இந்த நிலைமையா? பேராவூரணி அரசுப் பள்ளியில் கூரையாய் தொங்கும் ஆபத்து!
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
எறும்புகள் நடத்தும் அறிவியல் பூர்வமான
எறும்புகள் நடத்தும் அறிவியல் பூர்வமான "மறுவாழ்வுப் போராட்டம்": வியப்பூட்டும் வாழ்வியல் பின்னணி

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
Embed widget