மேலும் அறிய

பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்

நாகையில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுகுடி முருகன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

நாகையில் மாவட்டத்தில்  வேளாங்கண்ணி பேராலயம்,  நாகூர் தர்கா, எட்டுகுடி முருகன் கோவில் உள்ளிட்ட  புகழ்பெற்ற  வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில்  ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் தமிழக அரசு கடந்த ஜனவரி 6ஆம் தேதி புதிய ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது.
 
இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு வழிபாட்டு தடை, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கொராணா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில் தளர்வு குறித்து தமிழக அரசு நேற்று ஆலோசனை நடத்தியது இதில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட அனுமதி அளித்தது.
 
பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்
 
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற முக்கிய வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோவில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலன் ஆலயம், நீலாயதாட்சி அம்மன் ஆலயம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை  மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் சானிடைசர்  பயன்பாட்டிற்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் நாகூர் ஆண்டவர் தர்காவில் அனைத்து பகுதிகளையும் பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்த பின்பு தர்காவிற்கு வருபவர்களை அனுமதித்து  வருகின்றனர். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே குறைந்த அளவில் வந்து செல்வதால் அங்கு வெறிச்சோடி காணப்படுகிறது.
 
பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நாகையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள்
 
வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில்  பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தலங்களுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து  சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்தால் மட்டுமே தங்களுக்கு வியாபாரம் நடப்பதாக தெரிவிக்கும் வணிகர்கள் தற்போது தமிழக அரசு கொடுத்துள்ள தவறுகளால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து தங்களுக்கு நல்ல வியாபாரம் நடந்து வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget