மேலும் அறிய

இன்று சென்னை திரும்புவோருக்கு நிம்மதி... ரயில்வே நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு

தஞ்சாவூரில் இரவு 11.46 மணிக்கு வந்து 11.48 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் மற்ற ரயில் நிலையங்களை கடந்து செல்லும்.

தஞ்சாவூர்: வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் இன்று சென்னைக்கு திரும்ப இருக்கீங்களா... அப்போ உங்களுக்குதான் இந்த ‘குட் நியூஸ்’ 

கோடைகால சீசன் மற்றும் வாக்களிக்க சென்று சென்னை திரும்பக் கூடிய பயணிகளுக்கு ஏதுவாக சிறப்பு ரயில் இன்று இரவு இயக்கப்பட உள்ளது என்பதுதான் அந்த இனிப்பான செய்தி. இன்று ஏப்.26 இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக காலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரம் வருகிறது. இந்த ரயிலில் 6 ஸ்லீப்பர் கோச், 12 ஜெனரல் கோச், 2 செகண்ட் கிளாஸ் கோச் உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த 23 -ம் தேதி தமிழகம் முழுக்க ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனை ஒட்டி பல லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 11,300 -க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சூழலில் கூடுதல் பொது பயண சேவைகளுக்கான தேவை அதிகளவு எழுந்துள்ளது. இதனால் இன்று இரவு திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 06192 என்ற எண் கொண்ட இந்த ஒன் வே எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் ரயில், இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 க்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படுகிறது.

இந்த ரயில் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று பயணிக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூரில் இரவு 11.46 மணிக்கு வந்து 11.48 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் மற்ற ரயில் நிலையங்களை கடந்து செல்லும். மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பயணிகளுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் விழுப்புரம் வழியாக செங்கல்பட்டு சென்றடையும் இந்த ரயில்,நாளை  திங்கட்கிழமை காலை 6. 15 மணிக்கு தாம்பரத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலாவாக வந்தவர்கள் என அனைவரும் மீண்டும் சென்னை திரும்ப இந்த சிறப்பு ரயில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் பஸ்சில் செல்ல முடியாத நிலையை போக்கி இந்த சிறப்பு ரயில் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக அனைத்து தரப்பு மக்களும் ரயில் பயணத்தைதான் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த ரயில் பயணிகள் கூட்டத்தால் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெகுநேரம் உட்கார்ந்து செல்ல பெண்களுக்கு ரயில் மிகவும் வசதியான ஒன்றாக இருக்கும். அதனால் சொந்த ஊருக்கு வந்தவர்கள் இந்த ரயிலை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சென்னை திரும்புபவர்களுக்கு கோடை காலத்தில் ஜில்லுன்னு ஜிகர்தண்டா சாப்பிட்டது போல் இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget