மேலும் அறிய

முதலாம் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரிந்து கொள்வோமா...?

திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.

பழங்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களின் பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடன்  ஆரம்பிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்தது. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக ஏகப்பட்ட புகழுரைகளை அதில் கூறியிருப்பர். வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.

மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள், அவர்களது ஆட்சிக்காலத்தில், மன்னர்கள் அடையும் வெற்றிகளை வைத்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது எந்த ஆண்டுகளில் எந்த நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன என்பதை அறிய செய்கிறது.
 
ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரிந்து கொள்வோமா...


ஸ்வஸ்திஶ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி எனத் தொடங்கி நீண்டு செல்கிறது மெய்க்கீர்த்தி.

மங்கல ஒலியான ஸ்வஸ்திஶ்ரீ என்ற அடைமொழியோடு தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி என்ன கூறுகிறது என்றால்... திருமகள் போல பெருநலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள', அதாவது திருமகள் எப்படி ராஜராஜனுடன் இருக்கிறாளோ அதேபோல, பெருநலச் செல்வியான நில மாதையும் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள நினைத்து, 'காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி' - மெய்க்கீர்த்தியின் இந்த வரி பெரும் ஆராய்ச்சிகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.


முதலாம் ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரிந்து கொள்வோமா...?

ராஜராஜன் அடைந்த முதல் வெற்றியாக காந்தளூர்ச்சாலை வெற்றியை இது குறிக்கிறது. ஆனால் காந்தளூர்ச்சாலை என்பது என்ன, கலமறுத்தருளி என்றால் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள், இது திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கடற்படைத் தளம் என்றும், சேரர்களின் கடற்படை பலத்தை அழிக்கும் ஒரு பகுதியே இந்த காந்தளூர்ச்சாலை கலம், அதாவது கப்பல்களை அழித்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் சிலரோ சாலை என்பது போர்ப்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றைக்குறிக்கும். பயிற்சிப்பள்ளிகளை அழித்து சேரர்களின் வலுவை ராஜராஜன் அழித்ததே இது என்று கூறுகின்றனர். இதற்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களில் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, ராஜராஜன் அடைந்த முதல் முக்கிய வெற்றி இந்த காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தது.

அடுத்து ராஜாராஜன் அடைந்த வெற்றிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, வேங்கை நாடு, அதாவது கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கிடையே உள்ள கீழைச்சாளுக்கியர்களின் வேங்கி நாட்டு வெற்றி, அதற்கடுத்து கர்நாடகாவில் மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி, அவர்களின் சிற்றரசான நுளம்பபாடி, மைசூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசான தடிகைபாடி, குடகு மலை நாடு ஆகிய இடங்களில் அடைந்த வெற்றிகள். பிறகு சேரநாட்டிலுள்ள கொல்லம், இன்றைய ஒரிசாவின் தென்பகுதியான கலிங்க நாடு ஆகிய இடங்களை வெற்றிகொண்டது.

சிங்களவர்களின் நாடான இலங்கை வெற்றி, இன்றைய மகாராஷ்ட்டிர மாநிலத்தின் தென்பகுதியான இரட்டை பாடி ஏழரை இலக்கம் என்ற நாடு ஆகிய நாடுகளை வெற்றி கொண்டதை இந்த மெய்க்கீர்த்தி குறிக்கிறது. மாலத்தீவுகளை ராஜராஜன் வெற்றி கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கடற்படை அடைந்த முதல் முக்கியமான வெற்றி இது. இந்தப் படையெடுப்பு, சோழ நாட்டு வணிகர்களைப் பாதுகாக்கும் முகமாகவே நடைபெற்றிருக்க வேண்டும். இந்த வெற்றிதான் பின்னால் ராஜேந்திரன் கடாரம் கொள்வதற்கு அடிகோலியது. இத்துடன் ராஜராஜனின் வெற்றிச் செய்திகள் நிறைவடைகின்றன.

அப்படிப்பட்ட 'திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே, செழியர்களான பாண்டியர்களை ஒளி குன்றச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவருக்கு ....'   என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.

இந்த மெய்க்கீர்த்தியின் இன்னொரு சிறப்பம்சம், ராஜராஜன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிட்டாலும், தோல்வியடைந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நாடுகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுவிடுவதுதான். மெய்க்கீர்த்திகளிலேயே ராஜராஜனுடையது தனித்தன்மை வாய்ந்தது ஆகும் என்றால் மிகையில்லை.

 

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget