மேலும் அறிய

தஞ்சாவூர் அருகே 8ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் தூய்மை கேள்விக்குறி

சரியான பராமரிப்பு இல்லாததால் மேம்பாலத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகின்றன. மேம்பாலத்தில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்குக் காரணம்

தஞ்சாவூர்: தஞ்சை – திருவையாறு பைபாஸ் சாலையில் 8-ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் செடிகள் முளைத்தும், குப்பை கூளங்களால் அசுத்தமாகவும் காணப்படுகிறது. மேலும் திருவையாறில் இருந்து இரவு நேரத்தில் தஞ்சைக்கு வரும் இருசக்கர வாகனங்கள் எதிரில் வரும் வாகனங்களுக்காக இடதுபுறம் ஒதுங்கினால் குப்பைகளால் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்கும் வகையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன. இந்த பைபாஸ் சாலையில் 8ம் நம்பர் கரம்பை பகுதியில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான பைபாஸ் சாலையாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் 8ம் நம்பர் கரம்பை மேம்பாலம் பகுதியில் இளநீர் மட்டைகள், ஜல்லிகள் மற்றும் செடிகள் பரவி கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் திருவையாறில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பின்னால் வரும் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு இடதுபுறம் ஒதுங்கினால் இந்த குப்பைகளால் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் மேம்பாலத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்படுகின்றன. மேம்பாலத்தில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலத்தின் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் குப்பைகள் மற்றும் செடிகளை அப்புறப்படுத்தி மேம்பாலத்தில் காணாமல் போன ரிப்ளக்டர்களை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சை-திருவையாறு பைபாஸ் கரம்பை மேம்பாலத்தில் நிலவும் மோசமான நிலை, பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget