மேலும் அறிய

பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரப்பணிகள் இயக்குனருக்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலமுறை ஊதிய நிரந்தர பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டி கடந்த 29 .11.2021  அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் மனு அளிக்கப்பட்டது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

அமைச்சரும், முதன்மை செயலாளரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை நியாயமானது  விரைவில் பணி நியமனம் ஆணை வெளியிடப் படும் என்று உறுதி அளித்தார்கள்.  ஆனால் இதுநாள் வரை அவர்கள் அளித்த உறுதி மொழி படி எந்தவித நடவடிக்கையும் இல்லை. உடனடியாக பணி நிரந்தரம் ,காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் இயக்குனர்களுக்கு அந்தந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மூலம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும்  இயக்கம்  சார்பில் நடைபெற்றது.

தஞ்சாவூரிலுள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜி. சுரேஷ்குமார், சந்தித்து சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து  வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படாவிட்டால் சென்னை  சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


பல்நோக்கு மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்

இந்த நிகழ்வில்  தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பி.சுந்தரலிங்கம்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் ஜி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு. மாவட்ட செயலாளர் த.பாஸ்கரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், அரசு போக்குவரத்து சங்க துணை தலைவர்      துரைமதிவாணன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை சங்க நிர்வாகிகள்  எஸ். கணேஷ் குமார், டி.காயத்திரி , எம்.வினோத்,எஸ். துர்கா, டி.சச்சிதானந்தம், என்.வினோத், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், சுகாதார பணியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  தொற்று போன்ற கொடூரமாக நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தங்களது உயிரை கூட கவலைப்படாமலும், குடும்பத்தாரை பற்றியும் எந்த அக்கறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எந்த விதமான நோய்கள் உருவானாலும் சுகாதார பணியாளர்களின் பங்கு அதிகளவில் உள்ளது.  தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைப்பளுகாரணமாக சுகாதார பணியாளர்கள் மன உளைச்சலில் ஆளாகி வருகின்றனர். இது குறித்து பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் பிப்ரவரி மாதம் 3 ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget