மேலும் அறிய

வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

’’ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்’’

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், நாடு முழுவதுமுள்ள பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை கொரோனா தொற்று வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா உருமாறி பரவ தொடங்கியது. இதற்கு டெல்டா வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் தற்போது இது மீண்டும் உருமாற்றம் அடைந்தது. இதற்கு ஒமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் தொற்று,  பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி விட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் ஆனது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது.தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி அவர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு அவரது ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும் என்பதால் அந்த வாலிபர் முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அறிவுறுத்தப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அந்த வாலிபர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும். இதே போல் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர், லண்டனில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்,  அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். மேலும் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிய, அவரது மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.இந்நிலையில் தஞ்சையை சேர்ந்தவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால், தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget