மேலும் அறிய

பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் உண்ணாவிரதம் - திருவாரூரில் 3 செவிலியர்கள் மயக்கம்

இந்தநிலையில் நேற்று இரவு மூன்று செவிலியர்கள் மயக்கமடைந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்றைய முன்தினம் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது.

பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் உண்ணாவிரதம் - திருவாரூரில் 3 செவிலியர்கள் மயக்கம்

இந்த நிலையில் மார்ச் 31 ஆம் தேதியன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி, பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை தொடங்கிய இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவு வரை செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு மூன்று செவிலியர்கள் மயக்கமடைந்ததை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் உண்ணாவிரதம் - திருவாரூரில் 3 செவிலியர்கள் மயக்கம்

இந்தப் பணிநீக்க ஆணையால் திருவாரூர் மாவட்டத்தில் 37 செவிலியர்களும், 40 தொழில்நுட்பனர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்படும் எனவும், மூன்று மாத கால ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் பணிபுரிந்ததற்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும், மேலும் அரசு பணிகளில் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget