மேலும் அறிய

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு 'நோ'… ரஜினி கருத்து அவரது கருத்து வைகோ கொடுத்த 'நச்' பதில்!

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார். முன்னதாக, முனைவர் எஸ். உதயகுமார் வரவேற்றார். வழக்குரைஞர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.

தஞ்சாவூர்: மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தையும், மும்மொழித் திட்டத்தையும் இப்போதைய தமிழக அரசு ஏற்கக்கூடாது. ரஜினி கூறிய கருத்து அவருடைய கருத்து. ஒருவர் சொன்ன கருத்தை ஆதரித்தோ - மறுத்தோ பேசுகிற வழக்கம் என்றைக்கும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

தஞ்சாவூரில் நடைபெற்ற கல்விக் காவலர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையாரின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ. விஜயராகவன், கைத்தறித் துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநர் டி.எஸ்.கே. இராஜசேகர், மதிமுக தெற்கு மாவட்டச் செயலர் வி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.

இதில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார். முன்னதாக, முனைவர் எஸ். உதயகுமார் வரவேற்றார். வழக்குரைஞர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி நடத்த வேண்டும் என விரும்புகிறேன். மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதே நிலைப்பாட்டைத்தான் இந்த அரசும் பின்பற்றும் என நம்புகிறேன்; பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன். வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும். நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு முந்தைய தொன்மையான செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கின்றன.

அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி மத்திய அரசு திணித்துக் கொண்டே வருகிறது. நீட் தேர்வுக்கு 22 லட்சம் மாணவர்கள் தயாரான நிலையில் கேள்வித் தாள் வெளியாகி, அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளாகியுள்ளனர். 

இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget