மேலும் அறிய
Advertisement
தேசிய வாக்காளர் தினம்: படகில் சென்று மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகை துறைமுகத்தில் விசைப்படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை கடற்படை முகாமில் இருந்து சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படகில் சென்று கடற்படையினர், மீன்வளத் துறையினர் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர், அக்கரைப்பட்டி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
நிதி மேலாண்மை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion