மேலும் அறிய
Advertisement
நாகையில் கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
பிரபல கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்திய நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி ; அதே கஞ்சா கடத்தல் கும்பலோடு அமர்ந்து சொகுசு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியானது
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி., ஜவகர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தகவலின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் (37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும். இது தொடர்பாக படகில் காவலுக்கு நின்றிருந்த பாப்பாக்கோயிலை சேர்ந்த சரவணன் (37), கீச்சாம்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகதீசன் (34), அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த சிலம்பு செல்வன் (35), அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த நிவாஸ் (30) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். இந்நிலையில், கஞ்சா கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீஸார் கைது செய்த ஜெகதீசன், சிலம்பு செல்வன், நிவாஸ் ஆகியோருடன் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நாகையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில், ஏற்கனவே போலீஸ் உடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட எஸ்.பி., ஜவஹர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி காத்திருப்பு பட்டியலுக்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமியை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion