மேலும் அறிய
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திராவைச் சேர்ந்த 2 வாலிபர்கள் உயிரிழப்பு
கடலில் வந்த வேகமாக அலையில் 4 பேரும் சிக்கி அலையில் அடித்து செல்லப்பட்டனர்.
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலத்தை சேர்ந்தவர் சோமநாயக். சஞ்சய் (19) , கேசவர்தன் (19), அஜீஸ் ( 19 ), பைசுல்லா ( 19 ) . இவர்கள் 4 பேரும் கடந்த 7ஆம் தேதி காலை சித்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணி வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தவர்கள் இரவு 8 மணியளவில் வேளாங்கண்ணி கடற்கரையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் வந்த வேகமாக அலையில் 4 பேரும் சிக்கி அலையில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை வேளாங்கண்ணி உதவி கரங்கள் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை காவலர்கள் உதவியுடன் சஞ்சய், கேசவர்தன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பைசுல்லா, ஆஜீஸ் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion