மேலும் அறிய

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கும்  திட்டத்தை விரைவுப்படுத்த எம்.பி., துரை வைகோ கோரிக்கை

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் 14.5 கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டிடங்கள் இடிப்புக்கான மொத்த செலவு மதிப்பீட்டை கேட்டறிந்தார்.

திருச்சி: திருச்சியில் சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி., துரை வைகோ மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையில் திருச்சியில் சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH) சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பான மதிப்பீடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி எம்பி துரை வைகோ, மாவட்ட கலெக்டர் வி.சரவணனை சந்தித்தார். அப்போது, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் 14.5 கி.மீ தூரத்திற்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டிடங்கள் இடிப்புக்கான மொத்த செலவு மதிப்பீட்டை கேட்டறிந்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு மதிப்பீடு செய்யப்படாததால் இந்த திட்டம் தாமதமாகி வருகிறது. "மொத்த இழப்பீட்டின் மதிப்பீட்டை தயார் செய்ய கலெக்டரிடம் கேட்கப்பட்டது.

அதன் பிறகு, நான் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி திட்டத்தை விரைவுபடுத்துவேன்," என்று துரை வைகோ கூறினார். இன்னும் இரண்டு வாரங்களில் மதிப்பீட்டு அறிக்கை தயாராகிவிடும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி-தஞ்சாவூர் தேசிய சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் சர்வீஸ் சாலை அமைப்பதை விரைவுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தை எம்.பி., துரைவைகோ நடத்தினார்.

இதில் திருச்சி பால்பண்ணை-துவாக்குடி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலையில் பழுதடைந்த தெரு விளக்குகள் விரைவில் மாற்றப்படும் என்று குடியிருப்பாளர்களிடம் எம்பி உறுதியளித்தார். இதுகுறித்து NHAI அதிகாரிகளிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அல்லித்துறை பஞ்சாயத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை கைவிட வேண்டும் என்றும் கலெக்டரிடம் எம்.பி. துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். "குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்" என்று தெரிவித்தார்.

திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை தடுக்கவும் எம்பி துரை வைகோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா சலுகை விலையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எழில் நகரில் சாலை வசதி செய்து தரவும் மனு கொடுக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இடையே டாஸ்மாக் கடை அமைய உள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. "அனைத்தையும் பெற்றுக் கொண்டும், விளக்கங்களை கேட்டுக் குறித்துக்கொண்டும் ஆவன செய்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget