மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில் அதிக வயதுடைய 107 வயது முதியவர்; ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ் வழங்கிய அமைச்சர்
தமிழ்நாட்டில் அதிக வயதுடைய 107 வயது முதியவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது , திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார்.
நாகை அருகே நாகூர் பொறையாத்தா கடை தெருவில் வசிக்கும் 107 வயது ராணுவ வீரரான கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்று வழங்குவதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து கோபாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த பின்னர், மக்களை தேடி மருத்துவத்துக்கான பெட்டகத்தினை வழங்கினார். பின்னர் வாழ்நாள் சான்றை கோபாலகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கருவூல ஆணையர் விஜயேந்திர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முடிவில் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத்துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்றிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி, நாகை மாவட்டம் நாகூரில் 107 என்கிற தமிழகத்தில் அதிக வயதுடைய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு கருவூலத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரடியாக வந்து சான்றிதழை வழங்கி உள்ளோம். 1916-ம் ஆண்டு பிறந்த கோபாலகிருஷ்ணன் முதல் கட்டமா 2-ம் உலகப் போர் நடந்த போது இந்திய ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றினார். பின்னர் சுங்கத்துறையில் பணியாற்றி, இறுதியாக போலீஸ் துறையில் பணியாற்றி 1972-ம் ஆண்டு ஓய்வு பெற்று அரசின் ஓய்வூதியத்தை பெற்று வருகிறார்.
எங்கிருந்தாலும் தமிழ் மொழியை யாரும் அழிக்கக் கூடாது, தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என்று கூறிய அமைச்சர், இதுபோன்று சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பது துரதிருஷ்டமானது என திருவாரூரில் தமிழ் மொழி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த பரிசீலனை நடந்து வருகிறது என்று கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion