மேலும் அறிய

தஞ்சையில் நடப்பது இனி திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும்: மேயர் சண்.ராமநாதன்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பௌர்ணமி வலத்துக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சையில் நடப்பது திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பௌர்ணமி வலத்துக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சையில் நடப்பது திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும். இதற்காக ஆலோசனை கூட்டமும் நடந்தது என்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

பெருவுடையார் திருக்கோயில் திரு தென் கைலாய வலம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற பௌர்ணமி வலத்துக்கு எதிர்பார்த்ததை விட பக்தர்கள் அதிகளவில் வந்தனர். 5 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பேர் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டனர். 

தஞ்சையில் நடப்பது இனி திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும்: மேயர் சண்.ராமநாதன்

தஞ்சாவூரிலிருந்து மட்டுமல்லாமல், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். திருவண்ணாமலை கிரிவலத்தை போன்று நடத்தப்படும் இந்த வலத்துக்கு சிவ பக்தர்கள் வேண்டுகோளின்படி, பெருவுடையார் திருக்கோயில் திரு தென் கைலாய வலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரணம் திருவண்ணாமலையில் நடப்பது கிரிவலம். இது மலைபாதையில் சுற்றி வருவது. அதனால் தஞ்சையில் நடப்பதை இனி திரு தென் கைலாய வலம் என்று அழைக்க வேண்டும் என்று பக்தர்கள், சிவத் தொண்டர்கள் வலியுறுத்தினர். அதன்படி இனி தஞ்சை பௌர்ணமி வலம் திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும்.

வரும் 16 ஆம் தேதி மாலை முதல் 17ம் தேதி காலை வரை திரு தென் கைலாய வலம்

இந்த முறை வரும் 16 ஆம் தேதி மாலை முதல் 17ம் தேதி காலை வரை திரு தென் கைலாய வலம் நடைபெறும். இந்த வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். கடந்த மாதத்தை விட இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த முறை 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த திலகர் திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதனால், பெரிய கோயில் அருகேயுள்ள மேம்பாலத்திலிருந்து பழைய நீதிமன்றச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், ஏறத்தாழ 50 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலர்களிடம் கேட்கவுள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்துள்ளோம்.

பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி, தற்காலிக சிற்றுண்டிகடை, அன்னதானம்

திரு தென் கைலாய வலப் பாதையில் பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி, தற்காலிக சிற்றுண்டி கடை, அன்னதானம் போன்றவை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்புடைய துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பாதையில் தளம், மின்விளக்கு, ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமராக்கள் போன்றவற்றை 6 மாதங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் மூலம் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. திரு தென் கைலாய வலம் வரும் பக்தர்கள் சற்று ஓய்வெடுத்து கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget