மேலும் அறிய

Alcohol Cyanide : மயிலாடுதுறையில் அரசு மதுபானத்தில் சையனைடு கலந்து குடித்ததால் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் விளக்கம்

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மது அருந்தி இருவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின் சயனைடு மதுவில் கலந்திருந்தது என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த இரு சம்பவங்களும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் இன்றும் மறையவில்லை. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறிள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் 55 வயதான பழனிகுருநாதன். இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொள்ளம்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். 

Alcohol Cyanide : மயிலாடுதுறையில் அரசு மதுபானத்தில் சையனைடு கலந்து குடித்ததால் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் விளக்கம்

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பூராசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மாலை 5 மணிவரையில் வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். மேலும் அவர்கள் அருகில் அரசு டாஸ்மாக் மதுபாட்டில் இரண்டு கிடந்துள்ளது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், ஒரு பாட்டில் திறக்காமல் அப்படியே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

Alcohol Cyanide : மயிலாடுதுறையில் அரசு மதுபானத்தில் சையனைடு கலந்து குடித்ததால் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் விளக்கம்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பூர் காவல்துறையினர் கொள்ளம்பட்டறையில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்த சிறிது நேரத்தில் இரண்டுபேரும் இறந்துள்ளனர். இருவருக்கும் குடும்பத்தில் எவ்வித பிரச்னையும் கிடையாது. இருவருக்கும் இணைநோய்கள் எதுவும் இல்லை. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால்தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ்குமார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மயிலாடுதுறையில் 2 பேர் இறந்தது டாஸ்மாக் மதுபானம் குடித்ததில் இறந்தார்களா? அல்லது வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Alcohol Cyanide : மயிலாடுதுறையில் அரசு மதுபானத்தில் சையனைடு கலந்து குடித்ததால் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் விளக்கம்

இந்நிலையில் பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் டாஸ்மாக் மதுபானம் சாப்பிட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தஞ்சாவூர் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்து காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Alcohol Cyanide : மயிலாடுதுறையில் அரசு மதுபானத்தில் சையனைடு கலந்து குடித்ததால் இருவர் உயிரிழப்பு - ஆட்சியர் விளக்கம்

இந்நிலையில், மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதுபானத்தில் சயனைடு கலந்துள்ளதாக தஞ்சாவூர் தடயவியல் மருத்துவ நிபுனர் குழு ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் டாஸ்மாக் மதுபானத்தால் உயிரிழப்பு நிகழவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் பொய்யான காரணங்களை கூறி திசை திருப்புவதாக குற்றம் சாட்டி மங்கையநல்லூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தால் திருவாரூரில் இருந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட உடல்கள் மீண்டும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக இரண்டு டாஸ்மார்க் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
Teachers Vacancy: ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
Teachers Vacancy: ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?
Embed widget