மேலும் அறிய

மலர் தூவி மாணவர்களை வரவேற்ற யானை;ஜாலியாக வகுப்பிற்கு சென்ற குழந்தைகள் - வைரல் போட்டோஸ்

மயிலாடுதுறையில் யானையை அழைத்து வந்து மலர்தூவி முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்ற பள்ளி நிர்வாகத்தினர். 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மீண்டும் பள்ளிகள் சீராக இயங்கி தொடங்கியது. 


மலர் தூவி மாணவர்களை வரவேற்ற யானை;ஜாலியாக வகுப்பிற்கு சென்ற குழந்தைகள் - வைரல் போட்டோஸ்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து திட்டமிட்டபடி இன்று தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் ஜூன் மாதம் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மலர் தூவி மாணவர்களை வரவேற்ற யானை;ஜாலியாக வகுப்பிற்கு சென்ற குழந்தைகள் - வைரல் போட்டோஸ்

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 843 பள்ளிகளும் இன்று முதல் செயல்பட்ட தொடங்கியுள்ளது. மாணவர்கள் புதிய சீருடையில் உற்சாகத்துடன் பள்ளிக்கு படையெடுத்தனர். முதல்நாள் மாணவர்களை நல்ல மனநிலையில் உற்சாகமாக வரவேற்க பல பள்ளிகளில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். 



மலர் தூவி மாணவர்களை வரவேற்ற யானை;ஜாலியாக வகுப்பிற்கு சென்ற குழந்தைகள் - வைரல் போட்டோஸ்

அதன் ஒன்றாக மயிலாடுதுறை  மகாதான தெருவில் உள்ள  அரசு உதவி பெறும் தேசிய துவக்கப்பள்ளியில், மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீகுருஞான சம்பந்தர் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பு நிகழ்ச்சியாக மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை அழைத்து வந்து வித்தியாசமாக வரவேற்பளித்தனர். காலை பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள் துதிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்து வரவேற்பு அளித்தது. தொடர்ந்து மாணவர்கள் யானைக்கு மலர்களை தூவி வணங்கி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். 


மலர் தூவி மாணவர்களை வரவேற்ற யானை;ஜாலியாக வகுப்பிற்கு சென்ற குழந்தைகள் - வைரல் போட்டோஸ்

யானை மூலம் வரவேற்பளித்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் மீது யானை துதிக்கை மூலம் மலர்களை தூவி ஆசீர்வாதம் செய்தது. வித்தியாசமான இந்த வரவேற்பு மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget