மேலும் அறிய

அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் வளாகம் முன்பு நிழல் தரும் மரங்கள் கொண்ட குறுங்காடுகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவியர் விடுதி, தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், மற்றும் மணக்குடியில் ரூ.24 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணிகளையும், மன்னம் பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஏ.பி.மகாபாரதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை நகரம் என்னும் பணி கடந்த ஒரு மாத காலமாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், அரசினர் மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதி போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்காக்கள் நமக்கு நாமே திட்டத்தில் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் நிழல் தரும் மரங்கள் என்று சொல்லக்கூடிய குறுங்காடுகள் மிக விரைவில் அமைக்கப்படும்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் வளாகம் முன்பு குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது. அதாவது பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி வந்து செல்வதால் அவர்கள் சற்று உக்காரும் நிலை ஏற்படுவதால் வளாகம் முன்பு நிழல் தரும் மரங்களும், உட்காரும் (இருக்கை) பலகையும் அமைக்கப்பட உள்ளது. அரசு அலுவலங்களில் மாதம் ஒரு முறை தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவிடபட்டுள்ளது. மேலும், பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள மண்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளேன். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 99 கோடி செலவில் வரும் ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும். மாவட்ட முழுவதும் சாலைகளில் சில இடங்களில் குண்டும் குழியுமான இருப்பதை  உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலம் சீரமைக்கப்படும். சாலையில் உள்ள வேகத்தடைகள் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்படும். பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீண்டும்  மஞ்சள் பை வழங்கப்பட்டது.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆதிதிராவிட நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய விடுதி வளாகம் முன்பு மரம் செடி குப்பைகள் இருந்ததை நேரில் பார்வையிட்டேன். அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சியின் மூலம் உடனடியாக குப்பைகளும், பூண்டும் புதருமான செடிகளும் அகற்றப்பட்டன. ஆதி திராவிட நலத்துறை விடுதியில் உடனடியாக இன்வெட்டர் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள மண்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறுங்காடுகள் அமைக்கப்படும் - மயிலாடுதுறை ஆட்சியர்

ஆய்வின்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், பொதுப்பணித்துறை, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ் ஒளி மற்றும் வருவாய்த்துறை நகராட்சி துறை பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
Embed widget