அனைத்து மதத்தினரும் பங்கேற்ற ஜமாலியா சையது யாசின் மெளலானா கந்தூரி விழா..!
திருமுல்லைவாசல் சையது யாசின் மெளலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபாய் உள்ளிட்ட வெளி நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்களின் இறை போதனைகளை போதித்து வந்த ஜமாலியா சையது யாசின் மெளலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர், இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய மார்கத்தை பரப்பியவர். இவர் தனது இறுதி காலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் 1964ஆம் ஆண்டு முக்தி அடைந்தார்.
Karachi restaurant: ஆண்களுக்கு ஆஃபர்! ஆலியாவை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் ஹோட்டல்! சீறும் ரசிகர்கள்!
அதனைத் தொடர்ந்து, அங்கு அவருக்கு அவரது சீடர்கள் தர்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் யாசின் மெளலானா அவர்கள் இறையடி சேர்ந்த தினம் கந்தூரி விழா அனுசரிக்கப்பட்டது வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கந்நூரி விழாவில் தஞ்சை, சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மெளலானாவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மெளலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிபடுத்தும் விதமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்த்துவர் என அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
1ஆம் வகுப்பு மெட்ரிக் பாடப்புத்தகத்தில் பிரதமர் மோடி சொன்ன முதலை கதை - வைரலாகும் புகைப்படம்
மேலும் இந்த தர்காவில் பிரார்த்தனை செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம், மேலும் ஆன்மீக ரீதியான பல நன்மைகள் இங்கு வந்து செல்வதால் கிடைக்கிறது என கூறப்படுவதால், பல்வேறு மதத்தினரும் மதபாகுபாடின்றி இங்கு வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். இருந்தபோதிலும் இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் இஸ்லாத்தில் உருவ வழிபாடு தர்கா வழிபாடு உள்ளிட்டவை இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், ஆகையால் தர்கா வழிபாட்டில் இஸ்லாமியர்கள் ஈடுபட வேண்டாமென வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Vegetables Price Today: கத்தரிக்காய் கம்மி விலை.. கொத்தவரை கொடூர விலை.. இன்றைய காய்கறி நிலவரம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்