மேலும் அறிய

வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

வெள்ள காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது குறித்து காவல்துறைக்கு  கமாண்டோ படை சார்பில் நேரடி பயிற்சி மயிலாடுதுறையில் வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கடற்கரையோர மாவட்டங்கள் புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டமும் கடலோர மாவட்டம் என்பதால் அதிகளவு புயல், வெள்ள பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்னை அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை புரிந்து மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அவ்வாறு வரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினரும் மீட்பு பணிகளில் பணியாற்றுவர். இந்த சூழலில் உள்ளூர் காவல் துறையினருக்கு மழை, வெள்ளம், புயல் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து போதிய பயிற்சி அளிக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை  தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள்  காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெண் காவலர்கள் உட்பட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் கடந்த 2 ஆம் தேதி துவங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் சென்னையில் இருந்து வந்துள்ள கமாண்டோ படை காவல்துறையினர் 4 பேர் பங்கேற்று பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான  இன்று மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகு மூலம் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை கயிறு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் காவல்துறை சேர்ந்தவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதும் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் கமாண்டோ படை வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினர்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மிக்க, பேரிடர் மீட்புப் படையினர் வரும் வரை எதிர்பார்க்காமல் உள்ளூர் காவல் துறையினரே இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் இந்த பயிற்சி அமைந்துள்ளது என்றும், மேலும் இந்தப் பயிற்சி என விரிவுபடுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் பொதுவாக அளிக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு மற்றுமின்றி ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தன்னார்வலர்களும் இப் பயிற்சியினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

40 ஆண்டுக்கு பிறகு உயிர்பெற்ற வாய்க்கால்... தண்ணீர் வந்த வேகத்தில் தேங்கிய அதிர்ச்சி!
40 ஆண்டுக்கு பிறகு உயிர்பெற்ற வாய்க்கால்... தண்ணீர் வந்த வேகத்தில் தேங்கிய அதிர்ச்சி!
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget