மயிலாடுதுறை: திமுக பேரூராட்சி தலைவருக்கு எதிராக பேரூராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள்
மணல்மேடு பேரூராட்சி கூட்டத்தில் தொடர்ந்து மற்ற வாடுகளை புறக்கணிப்பதாக கூறி திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த கண்மணி என்பவர் பதவிவகித்து வருகிறார். பேரூராட்சியில் திமுகவிற்கு 8 உறுப்பினர்களும், அதிமுகவிற்கு ஐந்து உறுப்பினர்களும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுவதாகவும், பொது நிதியிலிருந்து செய்யப்படும் வேலைகளை திமுக பேரூராட்சித் தலைவர் தனது 1-வது வார்டுக்கு ஒதுக்கி கொள்வதாகவும், மற்ற வாடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு கூட தருவதில்லை என்று அதிமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தொடர்ந்து தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பல கூட்டங்களாக வலியுறுத்தும் எந்த வேலைகளையும் செய்வதில்லை, என்று தெரிவித்து மன்ற கூட்டத்தில் நடுவே அதிமுக உறுப்பினர்கள் மதன் பாண்டியன், செல்வி, லதா ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பேரூராட்சி உறுப்பினர்களை தொடர்ந்து திமுக உறுப்பினர்களான ரகுவரன் கணேசமூர்த்தி சாவித்திரி ஆகிய மூன்று பேர் தங்கள் வார்டுகளும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து நகர்மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களை தொடர்ந்து திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். பொதுவாக கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டை தெரிவித்து கூட்டத்தில் வெளிநடப்பு செய்வது வழக்கமான ஒன்று என்றாலும், தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
DGE: 11, 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்; அரசுத் தேர்வுகள் இயக்குநர் முக்கிய உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்