மேலும் அறிய

தஞ்சாவூர்: குடிநீர் வடிகால் வாரிய அலுவலக சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திக்கு சட்டமன்ற பேரவைக்குழுவினர் பாராட்டு

ஓராண்டுக்கு தஞ்சாவூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் 87,600 யூனிட்டுகள் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுவின்  தலைவர் மற்றும் கம்பம் எம்எல்ஏ  ராமகிருஷ்ணன் தலைமையில், உறுப்பினர்கள் மேலூர் எம்எல்ஏ  பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம்,  சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, கங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி,  தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர்  தஞ்சாவூரில் பூம்புகார், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

இக்குழுவினருக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  கைவினைப் பொருட்களின் தரம், நடைபெறும் பணிகள் குறித்து விளக்கமளித்தார். பின்னர் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை,  நாச்சியார் கோவில் குத்து விளக்கு போன்ற விற்பனைப் பொருட்களையும், தஞ்சாவூர் கலைத்தட்டு உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய தஞ்சாவூர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் 60 கிலோ வாட் திறனுள்ள மின் கட்டமைப்புடன் கூடிய சூரிய மேற்கூரை மின்நிலையம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த எரிசக்தி மேம்பாட்டு ரூ.36 லட்சம்  செலவில் நிறுவப்பட்டுள்ளது. எரிசக்தி மேம்பாட்டு மூலமாக நாளொன்றுக்கு தோராயமாக 240 யூனிட்கள் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 87,600 யூனிட்கள் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை பொறுத்தவரையில் எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிலையான மின்கட்டணமாக யூனிட்டு ஒன்றுக்கு ரூ.4.65 வீதம் 25 வருடத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முலமாக ஆண்டொன்றுக்கு தோராயமாக 72 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீடு குறைக்கப்படுகிறது. இதன் செயல்பாடு பாராட்டும் வகையில் உள்ளது.

இதே போன்று தமிழகத்தில் பிற இடங்களிலும் பல்வேறு துறை சார்பில் அமைக்க நாங்கள் பரிந்துரை செய்ய உள்ளோம். தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில்  23,400 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 445 கிராம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 88 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 48 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்ணையும், நாளொன்றுக்கு 30 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட ஒரு பால் குளிரூட்டும் மையமும் மற்றும் மொத்தம் 50 ஆயிரம்  லிட்டர் திறன் கொண்ட 9 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையமும் செயல்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது  தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget