மேலும் அறிய

விபத்து போல் சித்தரித்து இளம்பெண் படுகொலை; 4 பேர் கைது

50 நாட்களுக்கு முன் ஜெயபாரதி விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

திருவாரூர் அடுத்த கடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதிக்கும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். மணமக்கள் இருவரும் திருமண ஆன சில மாதங்களில் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிற்கு சென்று விட்டனர். அங்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது.

இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் ஜெயபாரதியையும், குழந்தையையும் திருவாரூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கே விஷ்ணு பிரகாஷ் அனுப்பிவிட்டார். பலமுறை தனது பெண்ணை கணவனுடன் சேர்த்து வைக்க ஜெயபாரதியின் பெற்றோர் முயற்சித்தும்  பலனில்லாததால் கும்பகோணம் மகளிர் காவல்நிலையத்திலும், முதலமைச்சர் தனி பிரிவுக்கும், சமூக நலத்துறைக்கும் ஜெயபாரதி தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதற்கும் பலனில்லாததால் 50 நாட்களுக்கு முன் விவகாரத்து கேட்டு கணவர் விஷ்ணு பிரகாஷ்க்கு ஜெயபாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னையால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனக்கு வேலை போய்விடும் எனவும், உடனடியாக நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும் என விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயபாரதியையும், அவரது பெற்றோரையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.


விபத்து போல் சித்தரித்து இளம்பெண் படுகொலை; 4 பேர் கைது

இதனிடையே ஜெயபாரதிக்கு தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை கிடைக்கவே தப்பளாம்புலியூர் கிராமத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஜெயபாரதி பணி முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வரும் போது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்து கிடப்பதாக ஜெயபாரதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உடனடியாக திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வாகன  விபத்தில் ஜெயபாரதி இறந்து விட்டதாக வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே ஜெயபாரதியின் விபத்து சாவில் மர்மம் இருப்பதாகவும், இது விபத்தில்லை எனவும் திட்டமிட்டு வாகனத்தை வைத்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தவேண்டும் என பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

வாகனம் திருவாரூர் அடுத்த பவித்திமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமானதாகவும், அதை இருதினங்களுக்கு முன்பு கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும் தெரிகிறது. 

மேலும் அன்று காலை ஜெயபாரதி வேலைக்கு செல்லும் பொழுது விபத்து ஏற்படுத்திய வாகனம் அவரை பின் தொடர்ந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களை வைத்து திட்டமிட்டு ஜெயபாரதியை கொலை செய்துள்ளாக போலீசரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் வாகனத்தை விற்பதற்கு உதவியாக இருந்த ஜெகனை பிடித்து விசாரித்ததில் ஜெயபாரதியை வாகனத்தை விட்டு மோத சொன்னதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். 

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விபத்து வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜெகன் அளித்த தகவலின் பேரில் நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளரான பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், வாகனத்தை ஓட்டிவந்த கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த பிரசன்னா, உதவியாக இருந்த ராஜா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் ஜெயபாரதியின் கணவரின் உறவினர்கள் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து போல சித்தரித்து இளம்பெண்ணை திட்டமிட்டு படுகொலை செய்த சம்பவம், திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசு ஊழியர்களே... கவனிக்கவும்! உங்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி: 1,186 ஏக்கர் பாசன நிலங்கள் தவிப்பு
தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தஞ்சாவூர் சமுத்திரம் ஏரி: 1,186 ஏக்கர் பாசன நிலங்கள் தவிப்பு
மிதவை தெப்பம் கட்டும் பணி தீவிரம்... எங்கு? என்ன விழாவுக்கு என்று தெரியுங்களா? 
மிதவை தெப்பம் கட்டும் பணி தீவிரம்... எங்கு? என்ன விழாவுக்கு என்று தெரியுங்களா? 
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Chennai Power Cut: சென்னைல வியாழக் கிழமை (17.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல வியாழக் கிழமை (17.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget