மேலும் அறிய

நவக்கிரகங்களும் வழிபட்ட குருங்குளம் செஞ்சுடேஸ்வர சுவாமி கோயில்.. சிறப்புகள் என்ன?

நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம் தஞ்சை மாவட்டம் குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு மேலும் ஒரு பெருமையாக, பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார்.

தஞ்சாவூர்: நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம் தஞ்சை மாவட்டம் குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மனம் உருகி நம்பும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரியன் ஒவ்வொரு நாளும் தன்னுடைய இயல்பான பணியை பகல் பொழுதில் முடித்துக்கொண்டு, தான் மறையும் நேரத்தில் சிவபெருமானிடம் ஆசியைச் பெறும் முகமாக தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்யும் தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக நம்பப்படும், அந்த ஸ்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.

அதுவும் கோயிலும், தீர்த்த  குளமும் அருகருகே இருக்க வேண்டும். இப்படி கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் வந்து தங்களுடைய சித்து விளையாட்டுகளையும், தவ வலிமைகளால் சிவபெருமானை கட்டுணர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அதனை தரிசனம் செய்வதும் காண கிடைக்காத ஒரு காட்சியாகும். அப்படிப்பட்ட ஒரு ஸ்தலம் தான் தஞ்சாவூருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம். இந்த ஊரில் கோயிலும், அதனையொட்டி உள்ள குளத்தாலும் தான் குருங்"குளம்" என பெயர் வர காணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது


நவக்கிரகங்களும் வழிபட்ட குருங்குளம் செஞ்சுடேஸ்வர சுவாமி கோயில்.. சிறப்புகள் என்ன?

மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ள செஞ்சுடேஸ்வரரும்,  தெற்கு நோக்கி அருள்பாலித்து வரும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியும் அகிலத்தை காக்க வந்ததுபோல், இந்த ஊரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட சடையன் குளம் தீர்த்தம் தான் செஞ்சுடேஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. . குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்புராண் கற்கள் எனப்படும் ஒருவித பழமையான கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.

இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் ஒன்றுசேர்ந்து வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து சென்றால் போதும், இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள சிவபெருமானான செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்டு பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது. இந்த திருக்கோயில் முன்பாக குளக்கரையில் விநாயகரும், முருகன் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.  பைரவரும், தட்சிணாமூர்த்தியும் தனித்தனி சன்னதிகள் அருள்பாலித்து காலப்போக்கில் சன்னதிகள் சேதமானதால் தற்போது ஒரே இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இத்தலத்தில் வேறு ஒரு கூடுதல் சிறப்பும் உள்ளது, பெருமாள் , ஸ்ரிதேவி, பூதேவியுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட கொடுத்து வைத்திருக்க வேண்டும். இக்கோயிலில் தினமும் மாலை நேரத்தில் சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை செஞ்சுடேஸ்வரர் மீது சிதறவிட்டு மறையும் அற்புத நிகழ்வு தொடர்ந்து இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் ஆன்மிக பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக காத்திருந்து எல்லோரையும் இன்புற்று வாழ வழிநடத்தி செல்கிறார் என நம்பப்படுகிறது

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget