மேலும் அறிய

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்...வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியது என்ன?

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது மாநில மாநாடு வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: திருவாரூரில் நாளை 5ம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு வணிகர் விழிப்புணர்ச்சி எழுச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வியாபாரிகளுக்கு எந்த ஒரு சலுகையும் இல்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 43-வது மாநில மாநாடு வருகின்ற மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ‘வணிகர் விழிப்புணர்ச்சி எழுச்சி மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 42 மாநாட்டை காட்டிலும் இந்த 43-வது மாநாடு மிக சிறப்பாக நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடு பணிகளும் நடந்து வருகிறது.


இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அமையும்...வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியது என்ன?

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு அமையும். ஏப்ரல் 5-ந்தேதி கால்கோள் நிகழ்ச்சி மாநாட்டு திடலில் நடைபெறுகிறது. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

மாநாடு நடைபெறும் திடலுக்கு பேரமைப்பின் கட்டமைப்பை உருவாக்கிய சிவசுந்தரம் பெயரும், மாநாட்டு நுழைவு வாயிலுக்கு நாகை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் கே.நடராஜன் பெயரும் சூட்டப்பட உள்ளது. சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் வணிகர்கள் தங்கள் குடும்பத்தோடு இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மத்திய பட்ஜெட்ஜை தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் வணிகர்களைப் பொறுத்தவரை இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நான்கு அடுக்குகளாக இருப்பதை இரண்டு அடுக்குகளாகக் மாற்றி இருக்கிறார்கள். அதனை ஒரு அடுக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்கள் கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சாதாரண வணிகர்களும் எளிதில் கையாளும் வகையில் ஜிஎஸ்டி சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல், வருமான வரி விலக்கு வரம்பை 15 லட்சமாக உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் நடக்கவில்லை. இது குறித்து மீண்டும் டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளோம். 

தேர்தல் நேரங்களில் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு 50,000 ரூபாய் என்ற வரம்பு மிகக் குறைவாக உள்ளது. இதை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மேலும், முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் வணிகர்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வருகின்ற தேர்தலில் வணிகர்களின் நிலைப்பாடு குறித்து மாநாட்டின் போது ஆட்சிமன்றக் குழு கூடி முடிவெடுக்கும். வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படும் தரப்பிற்கே எங்கள் ஆதரவு இருக்கும்.

கரூர் மாவட்டம், குளித்தலை கிருஷ்ணராயபுரம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறி நடத்தப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதும் வணிகர் சங்க பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget