மேலும் அறிய

மயிலாடுதுறையில் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் - பொதுமக்கள் அவதி..!

மயிலாடுதுறை அருகே வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனை அமைத்ததால், தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் காவிரி தண்ணீர் புகுந்துள்ளது.

மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் என்ற தனி நபர், ஸ்ரீநாராயணபுரம் என்ற பெயரில் வீட்டு மனைகளுக்கான ப்ளாட் அமைத்துள்ளார். அந்த வீட்டுமனை அருகில் சென்ற வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து அதில் மணலை கொட்டி குறுக்கே மண்சாலை அமைத்து வீட்டுமனைகளுக்கு செல்ல பாதையை உருவாக்கி அந்த வீட்டுமனைகளை விற்பனை செய்துள்ளார். தற்போது அங்கு 350 பேர் இடம் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். 

மயிலாடுதுறையில் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் -  பொதுமக்கள் அவதி..!

இந்நிலையில் 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் நிதி திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரினர். இந்த சூழலில் வாய்க்காலை அடைத்து சாலை அமைக்கப்பட்ட பகுதியில் வாய்க்காலை மீண்டும் தோண்டி வாய்கால் மேல் பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள்  கோரிக்கை விடுத்தனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் வாய்க்காலின் குறுக்கே  அமைக்கப்பட்டிருந்த சாலையில் பாலம் கட்டாமலும், தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தராமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். 

மயிலாடுதுறையில் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் -  பொதுமக்கள் அவதி..!

இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் இருந்து முத்தப்பன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, ஸ்ரீ நாராயணபுரத்தில் வாய்க்கால் குறுக்கே உள்ள சாலையால் தண்ணீர் செல்ல வழியின்றி  வாய்கால் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 100 க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், வாய்காலில் அடைக்கப்பட்ட பகுதியில் ஒருபுறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்றொருபுறம் வாய்க்கால் வறண்டு தரிசாக காணப்படுகிறது. 

மயிலாடுதுறையில் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் -  பொதுமக்கள் அவதி..!

தண்ணீர் செல்ல வழியில்லை என்று தெரிந்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நகரில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறி வீட்டுமனையின் விலையை விட  ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, இடத்தை விற்பனை செய்த பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் தண்ணீர்செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் வீடுகளுக்குள் புகுந்த காவிரி நீர் -  பொதுமக்கள் அவதி..!

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வீட்டு மனையாக மாற்றப்பட்ட பல இடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக ஆக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு மழை காலங்களிலும் பல்வேறு ஊர்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சொல்வது தொடர்கதையாக இருந்து வருவதும் அதற்கான காரணம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததுதான் என பல செய்திகள் வெளிவந்தாலும், வீட்டு மனைகளை வாங்கும் பொதுமக்கள் அதனை ஆராய்வது இல்லை என்றும், இதற்கு ஆசைப்பட்டு நீர்நிலைகளை எனக்கு செய்து வீட்டுமனை பட்டா அமைப்பாளர்களுக்கு அதிகாரிகள் அங்கீகாரம் அளித்து விடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget