மேலும் அறிய

நான் உங்கள் வீட்டு பிள்ளை.. சாதனை பட்டியலை கூறி வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்

தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் எங்கேயும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

தஞ்சாவூர்: குடிநீர் பிரச்சனை எதுவுமே இல்லாத தஞ்சாவூரை உருவாக்கியிருக்கிய உங்கள் வீட்டு பிள்ளையான என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள் என்று தஞ்சை தொகுதி மக்களிடம் தி.மு.க வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குகள் சேகரித்தார்.

வரும் 23ம் தேதி தமிழக சட்டமன்றம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதன் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சண்.ராமநாதன் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இதனால் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாகமாக  வரவேற்று வருகின்றனர்.  

இந்நிலையில் வேட்பாளர் சண் .ராமநாதன் உழவர் சந்தை, மீன்மார்க்கெட் பகுதிக்கு சென்று விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அருகில் இருந்த டீக்கடையில் அனைவருக்கும் டீ தயார் செய்து கொடுத்து ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். பின்னர் விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வாக்கு சேகரித்தார். விளையாட்டு வீரர்கள் வைத்த சில கோரிக்கைகளை தான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினார். பின்னர் தொடர்ந்து தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசும்போது, தஞ்சை மாநகரில் நாம் மேயராக பணியாற்றிய போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். குடிநீர் பிரச்சனை எதுவுமே இல்லாத தஞ்சாவூரை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் 20,30 ஆண்டுகளுக்கு தஞ்சாவூரில் குடிநீர் பிரச்சனை என்ற பேச்சுக்கு இடம் இல்லாத நிலையை எட்டி உள்ளோம். அதேபோன்று தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் எங்கேயும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

முன்னாள் முதல்வர் கலைஞர் திறந்து வைத்த உழவர் சந்தை தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கலைஞரின் உன்னதமான திட்டங்களில் இதுவும் ஒன்று. விவசாயிகளின் நலனை பேணிக் காக்கும் வகையில் நேரடியாக அவர்களே காய்கறிகளை விளைவித்து வியாபாரம் செய்து வருவாய் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டது தான் உழவர் சந்தை. இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற  நோக்கில் கலைஞர் இத் திட்டத்தை கொண்டு வந்தார்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அனைத்து திட்டமும் மிகச் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர். தஞ்சாவூரில் மின்விளக்காக இருக்கட்டும், குப்பை அள்ளுவதாக இருக்கட்டும் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் மக்களை தேடி நாங்கள் செல்லும்போது உங்களுக்குத்தான் இந்த முறை ஓட்டு போடப்போகிறோம் என உறுதி கூறுகின்றனர். காரணம் அந்த அளவுக்கு தஞ்சாவூரில் நலத்திட்டங்கள் செய்து சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள்.

இந்திய அளவில் முதலிடத்தை பிடிச்சு வெற்றி பெற்றீங்க. அதனால உங்களுக்குத்தான் இந்த முறை உதயசூரியனுக்குத் தான் ஓட்டு. 2வது முறை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்று நம்மிடம் உறுதியாக கூறுகிறார்கள். தஞ்சாவூரில் டைட்டல் பார்க், போக்குவரத்து நெரிசலை போக்கும் ஹைட்ராலிக் கார் பார்க்கிங், புனரமைக்கப்பட்ட ராஜப்பா பூங்கா, மக்கள் தேடி மருத்துவம், சிவகங்கை பூங்கா, ரவுண்டாக்கள் சீரமைப்பு, முழுமையான சாலைப்பணிகள், குப்பைககள் அகற்றம் என நிறைய விஷயங்களை சிறப்பாக செய்துள்ளோம்.

முதல்வரிடம் மீண்டும் நாங்கள் கேட்டபோது பெரிய டைட்டல் பார்க் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவமனை மிகப்பெரிய அளவுல கட்டி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பல திட்டங்கள் வர உள்ளது. இப்போது தஞ்சாவூர் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  தொடர்ந்து மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன் என்றார் .

பின்னர் மாலை தஞ்சை கோட்டை பகுதியான 13,26,27 ஆகிய வார்டுகளில் வேட்பாளர் சண் ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget